His & Her

எந்த சோப்பு உ*டலுக்கு ஏற்றது? TFM என்கிறார்களே, இதனை எப்படி தேர்வு செய்து வாங்குவது?

Jul 17 2021 10:10:00 PM

நாம் குளிக்கும் சோப்களில் மூன்று தரங்கள் உள்ளன. அதனை தான் TFM என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம். Total F*at Matter எனும் மொத்த கொ*ழுப்பு அளவு ஆனது குறைந்தபட்சம் 76% இருக்கும். இதில் கிரேடு 2 என்றால் 70% தான் இருக்கும். கிரேடு 3 என்பது 60% தான் இருக்கும். நாம் வாங்கும் சோப்புக்கள் இதற்கு கீழே உள்ள சதவீதத்தில் இருந்தால், அதனை தவிர்த்தல் நல்லது. 

TFM moisturizer

Total F*at Matter எதற்காக பார்க்கிறோம் என்றால் சோப்பில் கொ*ழுப்புசத்து அதிகம் இருக்கும்போது, நமது தோ*லிற்கு போதுமான ஈ*ரப்பதத்தை கொடுக்கும். கொ*ழுப்புசத்து குறைவாக உள்ள சோப்பை வாங்கும்போது அது தோ*லிற்கு வறட்சியை ஏற்படுத்திவிடும். தோ*ல் வறட்சி ஏற்பட்டாலே மற்ற எல்லா தோ*ல் பிரச்சனைகளும் வந்துவிடும்.

TFM moisturizer

வறண்ட சருமம் கொண்டவர்கள் PH 5.5 எனும் அளவில் உள்ள சோப்புகளை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் என்றால் தைம் எனும் மூலிகை கலந்த சோப் அல்லது பாடிவாஷை பயன்படுத்தலாம். எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்தின் கலவை என்றால், கிளிசரின் சோப்பை பயன்படுத்துவது நல்லது. பாடிவாஷ் பயன்படுத்துவதாக இருந்தால், எண்ணெய் சருமத்திற்கு Tea tree oil கொண்ட பாடிவாஷ் ஏற்றது. அதுவே வறண்ட சருமம் எனில், சூரியகாந்தி, சோயா, ஓட்ஸ் நிறைந்த பாடிவாஷ் ஏற்றது. 

TFM moisturizer

இப்போது குழந்தைகளுக்கென பிரத்யோக சோப்புகள் வந்துவிட்டது. ஆனால் முந்தைய தலைமுறை குழந்தைகளுக்கு என எந்த சோப்பை பயன்படுத்தினார்கள்? மனிதன் எப்போதிருந்து சோப்பை பயன்படுத்த ஆரம்பித்தான் என்றால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். ஆமாங்க! பாபிலோனியா மக்கள் சுமார் 2500 ஆண்டுகளாக சோப்பை பயன்படுத்தி வருகிறார்கள். உப்பு, காரம் விலங்கு அல்லது தாவரத்தின் கொ*ழுப்பு கொண்டு சோப்பு தயாரித்து பயன்படுத்தி உள்ளார்கள். 

TFM moisturizer

பெரும்பாலும் பிறந்த குழந்தைக்கு சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது. ஏனெனில் பிறந்த குழந்தையின் தொழில் முக துவாரங்கள் இருக்காது. பிறந்த குழந்தைகளுக்கு பெரும்பாலும் ம*ருத்துவர்கள் சோப்பை பயன்படுத்த அறிவுறுத்தமாட்டார்கள். வறண்ட சருமம் கொண்டவர் ஈரப்பதம்(moisturizer) அதிகமுள்ள சோப்பாக பார்த்து வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு பெரியவர்கள் பயன்படுத்தும் moisturizer சோப்களை போடகூடாது. ஏனெனில் குழந்தையின் சருமத்தை எண்ணெய் சருமமாக மாற்ற வாய்ப்புகள் அதிகம். குழந்தைக்கு ஏற்கனவே முகத்தில் ஈரப்பதம் கண்டிப்பாக இருக்கும். மேலும் ஈரப்பதத்தை கூட்ட எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருப்பதுவே நல்லது. முக்கியமாக குழந்தைகள் ஆகட்டும் பெரியவர்கள் ஆகட்டும் யாராக இருந்தாலும் அதிக வாசனை உள்ள சோப்புகளை எப்போதும் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.