Hugs & Kisses

#shyguys: ஆண்கள் எப்போதெல்லாம் வெட்கப்படுவார்கள்?

Mar 25 2020

ஆண்கள் வெட்கப்படும் தருணங்கள் மிகவும் அழகாக இருக்கும். அந்த வெட்கத்தை மறைக்க அவர்கள் படும் பாடு இருக்கே, முகத்தை கீழே சாய்த்துக்கொள்வார்கள் இல்லையேல் திருப்பி கொள்வார்கள். அவர்களது இந்த சமாளிஃபிகேஷனை பார்க்கும் போது, அவ்வளவு அழகாக இருக்கும். பெண்கள் வெட்கப்பட்டால் கூட இவ்வளவு அழகு ததும்புமா என தெரியவில்லை. அப்படி ஆண்கள் வெட்கப்படும் அழகான தருணங்கள்.

#1. முதன் முதலாக திருமண பேச்சு எடுக்கும் போது அல்லது பெண் பார்க்க செல்லும் போது அல்லது  பெண்ணிடம் பேசும் போது பொதுவாக வெட்கம் வெளிப்படும். பெண்ணை பிடிச்சிருக்கா தம்பின்னு கேட்கும் போது, அவர்கள் பிடிச்சுருக்கு என சொல்லும் போது வெட்கம் கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படும். 

#2. ஒரு பெண் முதன்முதலாக ஆணின் கண்ணை பார்த்து பேசும் போது மற்றும் அவரை ஒருபெண் விரும்புவதாக சொல்லும் போது, வெட்கம் வெளிப்படும் 

#3. கிராமங்களில் முறைப்பெண்கள், ஆண்களை மாமா என அழைக்கும்போது ஒருவித நமட்டு சிரிப்புடன் கூடிய வெட்கம் தொற்றிக்கொள்ளும். மனைவி கூட அவ்வளவு உரிமையாக 'மாமா' என அழைக்கமாட்டார். ஆனால் முறை பெண்கள் 'மாமா' என அழைக்கும்போது மனதுக்குள் பொறுப்பு கலந்த வெட்கம் வெளிப்படும்.

#shyguys: இதை தவிர ஆண் காதலிக்கும் போது, அழகான வெட்கங்கள் அவ்வப்போது வெளிப்பட்டு கொண்டே இருக்கும். ஏதாவது குறுஞ்செய்தி வந்தால் கூட சிரிப்பு கலந்த வெட்கம் வெளிப்படும் அப்போதுதான் அம்மாவிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த சூழலை சமாளிப்பதற்கும் உடனடியாக பொய்கள் தயாராக இருக்கும்.   

      

Top