Out of Box

ஆண்கள் வேலைக்கே போகாமல், "இல்லத்தரசன்" ஆகிவிட்டால், பெண்கள் மட்டுமே வேலைக்கு போகும் உலகம் எப்படி இருக்கும்? அடிச்சு சொல்றேன், கண்டிப்பா இதெல்லாம் நடக்குமாம்!

Jan 08 2022 02:37:00 PM

பெண்கள் எத்தனை நாளைக்கு தான் இல்லத்தரசியாவே  இருப்பாங்க. ஒரு சேஞ்சுக்கு ஆண்கள் இல்லத்தரசனாக இருந்து, மனைவிமார்கள் வேலைக்குப்போனால், அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இன்று பெரும்பாலான பெண்கள் வீட்டின் நிதி ஆதாரத்தை உருவாக்க என்றில்லாமல், அந்தஸ்துக்காகவும் வேலைக்கு செல்கின்றனர். எனவே ஆண்களைவிட குறைவான சம்பளத்திற்கு வருவதால், நிறுவணங்கள் சந்தோஷமாக வேலை தருகின்றன. இதுவே ஆண்கள் இல்லாத நிலை வரும்போது, சம்பளம் கூடுதலாய் கேட்பார்கள்.

husband wife house-husband

அப்புறம் மெட்டர்னிட்டி விடுமுறை, அது இதுவென்று கொடுத்துவிட்டு, சம்பளமும் அதிகம் கொடுத்து, திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்கள் வேலையில் ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பிப்பார்கள். இன்றுள்ள ஆண்கள்போல, நாளை பெண்கள் "நான் சம்பாதிக்கிறேன், புகைபிடிப்பேன் மதுகுடிப்பேன் நீ கம்னுகிட…." என்று நடக்க ஆரம்பித்துவிட்டால், இவர்களை விட எந்த பழக்கமும் இல்லாமல் வீட்டில் அடக்க ஒடுக்கமாய் இருக்கும் ஆண்களை வேலைக்கு வைப்பதே இலாபம் என்று கம்பெனிகள் கருத ஆரம்பிக்கும்.

husband wife house-husband

அதற்கப்புறம் ஆண்கள் வேலைக்குப் போகும்படி வாழ்க்கை முறையை மாற்றினால் எப்படியிருக்கும்? என்ற விவாதம் கிளம்பி, பழையபடி உலகம் மாற ஆரம்பிக்கும். இதில் என்ன கூத்து இருக்குன்னா, பெண்கள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பதால், பணத்தின் அருமை தெரியும். துணிமனிகளுக்கு அதிக செலவு செய்ய மாட்டார். பியூட்டி பார்லர் எல்லாம் காத்து வாங்கும். பெண்கள் ஆபீஸ் போகும் நாட்களில், கணவன்மார்கள் நன்றாக சமைத்து வைத்து இருப்பார்கள். குழந்தைகளை பாசமா பார்த்துக்கிடுவாங்க. வெளியே எல்லோருமே பெண்களாக இருப்பதால் ஈவ்டீசிங் மாதிரியான சம்பவங்கள் எல்லாம் நடக்காது.

husband wife house-husband

டிவி சேனல்களில் சீரியல் எடுக்கும் இயக்குனர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். ஆண்களை கவரும் வகையில், சண்டை காட்சிகளும், காதல் காட்சிகளும் நிறைந்த சீரியல் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும். இந்த மாதிரி எல்லாம் உலகம் மாறினால் நிஜமாவே காமெடியாத்தான் இருக்கும். இது பற்றி உங்கள் மூளை என்ன மாதிரி யோசிக்குதுன்னு கீழே பதிவிட்டால், உங்கள் சிந்தனை திறனை மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள்.