Out of Box

#rajini: அதிகாரம் வெல்லுமா? அனுபவம் வெல்லுமா? தமிழக அரசியலில் புது இரத்தம் பாய்ச்சும் ரஜினியின் திட்டம்!

Jul 29 2020

'ரஜினி இ-பாஸ் இல்லாமல் எதற்காக லம்போகினியில் சென்றார்; எந்த ஒரு பிரச்சனை கிளம்பினாலும் ஆற அமர மெதுவாக ட்வீட் செய்கிறார்; ஏதாவது அவருடைய படம் வெளிவந்தால் மட்டும் தான் அரசியல் குறித்து வாயை திறக்கிறார்; ஆன்மீக அரசியலை முன்வைக்கிறார்; பா.ஜ.க உடைய இன்னொரு முகம் போல தென்படுகிறார்' என இப்படி ரஜினி மீது குறை சொல்வோர் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்கள். இ-பாஸ் இல்லாமல் சென்றார் என்றவர்கள், அவரது இ-பாஸ் இணையத்தில் வைரலானதும் கப்புசுப்பென காணாமல் போய்விட்டார்கள்.

rajini annamalai-IPS

கடவுள் இல்லை என்பதை ஆதரித்து, பல ஆண்டுகளாக உள்ள மக்களின் நம்பிக்கையை இழிவு படுத்தும் கூட்டமே, ஆணித்தனமான அரசியல் செய்யும் போது, மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்த கூடாது, அவர்களது மதநம்பிக்கையை கொச்சைப்படுத்தகூடாது, அது அவர்களது விருப்பம் என மக்களின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்? கண்டிப்பாக ஆதரவு தான்!

rajini annamalai-IPS

'அவர் ஒரு நடிகரப்பா! அவருக்கு என்ன அரசியல் தெரியும்? இணையத்தில் அவரது பதிவே ஒரு பிரச்சனை காலாவதியான பின்னர் தான் மக்களை வந்தடைகிறது. எங்க போய் இவர் அரசியலில் உள்ள தந்திரங்களை தெரிந்து கொண்டு, மற்ற நரி கூட்டத்திற்கு இணையாக அரசியல் செய்வார்? என பலர் இதே கருத்தை முன் வைக்கின்றனர். 

rajini annamalai-IPS

காலம்காலமாக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நீயா நானா என அடித்துபிடித்து, அது குறித்து பேசுவது அல்லது அறிக்கை விடுவது என ஏதோ ஒரு பாணியில் தங்களது இருப்பை காட்டிக்கொள்வார்கள். ஏன் ரஜினியும் அப்படியே செய்து கொண்டு போயிருக்கலாமே, லேட்டாக ட்வீட் செய்வதற்கு பதில் சும்மா இருந்திருக்கலாமே! கால தாமதமாக ட்வீட் செய்து, ஏன் எதிர்பாளர்களிடம் அர்ச்சனை வாங்கிக்கொள்ள வேண்டும்?

rajini annamalai-IPS

இதற்கு பின்னாலும் ஒரு காரணம் உண்டு. மற்ற கட்சிகள் இந்த பிரச்சனையை எங்க கட்சி தான் முதலில் முன்னெடுத்தது என்ற பெயருக்காக தான் போட்டிபோட்டுக்கொண்டு, குறிப்பிட்ட பிரச்சனை குறித்து பேசுகிறார்கள். காலம் காலமாக மக்களுக்கு அப்படியே பழக்கப்படுத்திவிட்டார்கள். நாமும் அவர்கள் தான் அரசியலை முழுதாக உற்று நோக்கி வருகிறார்கள் என்ற போக்கில் சென்று விடுகிறோம். ஆனால் அவர்கள் அரசியல் செய்வதற்கு அந்த பிரச்சனை தேவை என்பதை நாம் சிந்திக்க மறந்துவிடுகிறோம். 

rajini annamalai-IPS

இந்தவகையில் ரஜினியை எடுத்துக்கொள்வோம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆரம்பம் முதல் உற்று கவனிக்கிறார். அதில் அரசு தலையிட்டு சுமூக முடிவு கொண்டுவரப்படுகிறதா என பார்க்கிறார். ஏனெனில் அரசு நடவடிக்கை எடுப்பதற்குள் எல்லா கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு, பெயருக்கு கருத்து செல்கிறேன் என்ற பெயரில் தங்களது கடமையை செய்துவிடுகிறார்கள். இறுதியில் அரசு நடவடிக்கை எடுக்கும் போது, எங்களது எதிர்ப்பால் தான் அரசு நடவடிக்கை எடுத்தது என்பதை பதிவும் செய்கிறார்கள். நாமும் இதை தான் நம்புவோம்.

rajini annamalai-IPS

ஆனால் ரஜினி போன்ற அரசியல் முதிர்ச்சி உள்ள தலைவர்கள் முதலில் அந்த பிரச்சனை எதனால் எழுந்தது, யாராவது தூண்டி விடுகிறார்களா, இதன் பின்னால் யார் இருப்பார்கள் என்பதையெல்லாம் அலசிய பின்னரே பேச ஆரம்பிப்பார்கள். அதை சரியாக கையாண்டு வருகிறார் ரஜினி!

rajini annamalai-IPS

பேசினால் மட்டும் போதுமா அடுத்து களத்தில் இறங்க வேண்டாமா.? அதிலும் ரஜினியிடம் ஒரு புதுமை தென்படுகிறது. நானே தலைவன், என்னிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்று நினைப்போருக்கு மத்தியில், எனக்கு பதவி ஆசை இல்லை, என் சார்பாக தகுதியான நபரை முன்னிருத்துவேன் என்று பலமுறை ரஜினி குறிப்பிட்டுள்ளார். இவரது அலைவரிசையோடு ஒத்த அந்த நபர் யாராக இருப்பார்? தமிழ்நாட்டில் உள்ள இளைஞர், சமூக பிரச்சனையை சரியாக கையாள தெரிந்தவர் இப்படி பல கோணங்களில் பார்க்க வேண்டும். அப்படி ரஜினியின் அலைவரிசையோடு ஒத்துப்போகும் நபர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் சிங்கம்! யாருப்பா இது புது பெயரா இருக்கு! துரைசிங்கம் சூர்யாவா இருக்குமோ?

rajini annamalai-IPS

சிங்கம் இவர் ஒரு ஐபிஸ் அதிகாரி, இவர் பெயர் அண்ணாமலை. இவர் பணியாற்றிய கர்நாடக மாநிலம் பக்கம் இவரை சிங்கம்னு தான் அழைப்பார்களாம். ஏனெனில் இவரது பணி காலத்தில் காட்டிய அதிரடியால் எங்கெல்லாம் போஸ்டிங் போடப்பட்டதோ அங்கெல்லாம் ஊழல், மோசடி என எதுவும் கிடையாது. பிரச்சனை என்றால் சும்மா பார்த்துக்கொண்டு மட்டும் நிற்காத நபர். அதனாலே அந்த மாநில அடித்தட்டு மக்கள் வரை ரீச் ஆனார். பணியாற்றிய இடங்களில் எல்லாம் சிங்கம்னு செல்லமா அழைக்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம். இவர் மீது ஒரு குறையும் சொல்லிட முடியாதாம். அந்த அளவிற்கு கைசுத்தம். 

rajini annamalai-IPS

இவர் நம்ம கரூர் பக்கம் தான். இப்போது விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர வேண்டும், அவர்களது பொருளாதாரம் உயர வேண்டும் என தனது ஐபிஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு  சொந்தமாக விவசாயம் செய்துகொண்டே அப்பகுதி விவசாயிகளின் நலனிற்காக போராடி வருகிறார். எதிர்காலத்தில் இளைஞர்களின் பிராண்ட்டாக(Brand) கூட மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

rajini annamalai-IPS

எதிர்காலத்தில் ரஜினியின் முதல்வர் வேட்பாளராக கூட வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இவரைப்போன்ற பல துடிப்புமிக்க இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக ரஜினி உருவெடுத்துள்ளதால், லேட்டாக வந்தாலும், பல லேட்டஸ்ட் அப்டேட்களுடன் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் உறுதியாகச்சொல்ல முடியும். காலம் கனிந்துவிட்டது, கனியை பறிக்கும் வாய்ப்பை ரஜினி யாருக்கு கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.