Misc

#healthylifestyle: கைகால் வலியென அடிக்கடி வலிநிவாரணியை எடுத்துக்கொள்வது சரியா?

Jul 31 2020

சில வீடுகளில் முதலுதவி பெட்டி போலவே, இன்றியமையாத ஒன்றுபோல எல்லா வலிகளுக்கும் மாத்திரை வைத்திருப்பர்கள். கலர் வாரியாக, வலி வாரியாக என பிரித்து தனிதனியே பெட்டிகளில் மெயின்டைன் செய்வார்கள். மெடிக்கல் ஷாப்பில் கூட அவ்வளவு மாத்திரை இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லை சுற்றியுள்ள சொந்தம்பந்தம் அக்கம் பக்கத்து வீட்டிற்கும் இவர்களே மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். இப்படி பல குடும்பங்கள் டாக்டருக்கு படிக்காமலே அந்த தொழிலை சிறப்பாக செய்து வருகின்றனர். 

healthy-lifestyle healthy-habits

பலர் கைகால் வலி, தலைவலியா உடனே ஒரு வலி மாத்திரையை வாங்கி போடு. என்ன மாயமோ தெரியாது, மாத்திரை எடுத்து கொண்ட உடனே வலி காணாமல் போகும். இப்படி திடீரென வலியை மட்டுப்படுத்துவது சரியா? தொடர்ச்சியாக வலிநிவாரணியை எடுத்துக்கொள்வது நல்லதா?

healthy-lifestyle healthy-habits

இந்த நிவாரணிகள் என்ன செய்கின்றன என்றால், தற்காலிகமாக வலியை உணராதபடி மூளைக்கு கட்டளை இடும். இந்த வேலையைத்தான் செய்கின்றன. அதனாலே அதற்கு அடிமையாகி அடிக்கடி எடுத்துக்கொள்கிறோம். பொதுவாக இரண்டு வகையான நிவாரணிகள் உண்டு. ஒன்று வலியை மறக்கடிக்க செய்யும் மற்றொன்று வலியை குறைப்பது.

healthy-lifestyle healthy-habits

வலியை குறைப்பது மற்றும் வலியை மறக்கடிப்பது இரண்டையும் வலியை பொறுத்தே மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். உதாரணத்திற்க்கு விபத்தில் ஒருவர் பெருவிரலை இழந்துவிடுகிறார். இருப்பினும் அவ்வப்போது பெருவிரல் இருந்த இடத்தில் வலியை உணர்கிறார். பெருவிரலே கிடையாது இருப்பினும்  பெருவிரல் இருப்பதாக மூளை பதிவுகள் இருப்பதாலே அந்த வலியை உணர்கிறார். மூளை இதனை மறக்க வேண்டும். அதற்குத்தான் வலியை மறக்கடிக்க செய்யும் வலிநிவாரணி.

healthy-lifestyle healthy-habits

அடுத்து வலிகுறைப்பு நிவாரணி, திடீரென அடிப்பட்டு காலில் வீக்கம் உள்ளதென்றால் வீக்கம் மற்றும் வலியை குறைக்க வலிகுறைப்பு நிவாரணி எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். வலியை குறைக்க மற்றும் வலியை மறக்கடிக்க என இரண்டு வகை நிவாரணிகளை பயன்படுத்தவும் மருத்துவர்களின் பரிந்துரை அவசியம். அடிக்கடி கைகால் வலிக்கிறது, தலை வலிக்கிறது என சிலர் நிவாரணிகளை எடுத்துக்கொண்டாலே வலி காணாமல் போவதாக உணர்வார்கள். இப்படி தொடர்ச்சியாக வலி இருந்துகொண்டே இருந்தால், அடிக்கடி வலிநிவாரணியை எடுத்துக்கொள்வதை தவிர்த்து ஒருமுறையாவது மருத்துவரை அணுகுவது நல்லது.