தமிழகத்தில் இன்னும் இரண்டே நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அனைத்து வகையான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்கள். வாக்களிக்கும் மக்களை சில வகைப்படுத்தலாம்.
கொள்கை, கோட்பாடு, திராவிடம் போன்ற கொள்கைகளை உடைய மக்கள் எப்போதும் தங்கள் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்களின் வாக்கை எவ்வளவு காசு கொடுத்தாலும் யாராலும் வாங்கமுடியாது. இது ஒரு வகை.
மாற்றம் நம் தமிழகத்தில் தேவை என்னும் குறிக்கோளோடு சில வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் முடிவில் தெளிவாக இருப்பதால் அவர்களின் வாக்கையும் யாராலும் பறிக்க முடியாது.
காசுக்காக வாக்களிக்கும் மக்கள் இன்னும் நம் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த காசு கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கத்தை திராவிட கட்சிகள் தான் தமிழ்நாட்டில் கொண்டுவந்தது. அந்த திராவிட கட்சிகளே காசு கொடுக்க மாட்டோம் என்று திருந்தினாலும் நீங்க காசு கொடுத்தால் தான் நான் ஓட்டு போடுவேன் என்னும் மனநிலை இந்த வகை வாக்காளர்களை விட்டு எப்போதும் மாறாது.
அடுத்தது நாம் பார்க்கப்போவது இருப்பதிலேயே மிகவும் மோ சமான சிந்தனை கொண்ட வாக்காளர்கள் பற்றியது. சில மக்கள் நாட்டில் என்ன நடந்தாலும் சரி, யார் ஆட்சி செய்தாலும் சரி, அவர்களுடைய ஜா தியை சேர்ந்த வேட்பாளர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்கிற வெ றியில் வாக்களிப்பார்கள். இதுதான் ஜனநாயக நாட்டில் நடக்கும் மிகப்பெரிய மு ட்டாள்தனம். நீங்கள் சற்று யோசித்து பாருங்கள். நீங்கள் வாக்களித்த அந்த நபர் என்றைக்காவது உங்களுக்கவோ, உங்கள் தொகுதிக்காகவோ ஏதாவது நல்லது செய்தாரா என்று? கண்டிப்பாக அந்த வேட்பாளர் உங்களுக்கு எந்த நல்லதும் செய்திருக்க மாட்டார்.
கூட்டணி கட்சிகளிடம் உங்கள் ஜாதி பெயரை சொல்லி பெட்டி பெட்டியாக காசு வாங்குவது மட்டுமே அவர்களுடைய குறிக்கோள். இனியாவது ஓட்டு போடுவதற்கு முன்பு பணம், ஜா தி என எதையும் எதிர்பார்க்காமல் மன சாட்சியுடன் உங்கள் தொகுதிக்கு நல்லது செய்யும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.