Spellbound

தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்கும் நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே இத்தனை கோடி வருமானமா! ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இவ்வளவு லாபமான விலை போனது அதிர்ஷ்டம்தான்!

Jan 12 2022 07:59:00 PM

சமீபகாலமாக விஷால் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சுமாராகத்தான் போனது. கடைசியாக வெளியான எனிமி படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர். இந்நிலையில் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சுப்பையா சண்முகம் என்பவர் வாங்கியுள்ளார். சுமார் பத்தரை கோடிகள் தந்து அவர் இந்த உரிமையை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vishal veeramevaagaisoodum

வீரமே வாகை சூடும் படத்தை து.பா.சரவணன் இயக்க விஷால், டிம்பிள் ஹயாதி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கிய இந்த திரைப்படம் அதிக இடைவெளியில்லாமல் விரைவில் முடிக்கப்பட்டது. மலையாள நடிகர் பாபுராஜ் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

vishal veeramevaagaisoodum

இந்நிலையில் விஷாலின் 31வது படத்திற்கு வீரமே வாகை சூடும் என்ற தலைப்பு வைத்துள்ளனர். சூரரைப்போற்று, வெந்து தணிந்தது காடு படத் தலைப்புகளின் வரிசையில் தற்போது வீரமே வாகை சூடும் தலைப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டி வருகிறார்கள். சிவப்பு நிறப் பின்னணியில் கையில் தடியுடன் சண்டைக் காட்சிகளுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

vishal veeramevaagaisoodum

வீரமே வாகை சூடும் திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குகிற நிலையில் பத்தரைகோடிகளுக்கு வீரமே வாகை சூடும் விலை போயிருப்பது ஆச்சரியமும் அதிர்ஷ்டமும் நிறைந்ததுதான். இதுதவிர சேட்டிலைட், டிஜிட்டல், தெலுங்கு உரிமை ஆகியவற்றின் மூலம் கணிசமான கோடிகள் விஷாலுக்கு கிடைக்கும்.

இந்தப் படமானது அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை என கூறப்படுகிறது. விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த வீரமே வாகை சூடும் படமானது வெளிவருவதற்கு முன்னரே விஷாலுக்கு லாபம் சம்பாதித்து தந்துள்ளது.