Spellbound

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த அந்த ஒரு கூட்டணி விரைவில் ஜோடி சேர்கிறது ! இந்த படம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்குமா?

Apr 07 2021 11:23:00 AM

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தளபதி விஜய். என்னதான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்றாலும் அண்மை காலங்களில் விஜய் சூப்பர் ஸ்டாரையே மிஞ்சி விட்டதாக செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளன. காரணம் ரஜினி அண்மைகாலங்களில் தனது ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்காமல் தனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார்.

vijay vetrimaran movie update

படம் என்னதான் சிறப்பாக இருந்தாலும் அதை அனைத்து ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் நடிகர் விஜய் அப்படி இல்லை. எப்போது ரஜினியின் வழியை பின்பற்ற ஆரம்பித்தாரோ அதுமுதலே ஸ்டைல், டான்ஸ், சண்டைக் காட்சிகள், குடும்ப ஆடியன்ஸை கவரும் படியான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். இதனால் தமிழ் சினிமாவில் தோ ல்வியே சந்திக்காத நடிகர் என்னும் கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

vijay vetrimaran movie update

நடிகர் விஜய்  விருதுகளின் மீது ஆசைப்படும் நபர் அல்ல. அவர்  முழுக்க முழுக்க தனது ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமே படங்களில் நடிக்கிறார். என்னதான் அவருடைய படங்கள் அனைத்தும் கோடிகளில் சம்பாதித்தாலும் அவருடைய ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே வ ருத்தம் தளபதி இன்னும் தேசிய விருது வாங்கவில்லை என்பது தான். விஜய் விருது வாங்காமல் போனதற்கு ஒரே காரணம் அவர் கமர்சியல் படங்களில் தொடர்ந்து நடிப்பது தான்.

vijay vetrimaran movie update

வெற்றிமாறன் எடுக்கும் படங்கள் அனைத்தும் தரமானதாகவும், விருதுகள் வாங்கக்கூடிய படங்களாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக தளபதியுடன் ஒரு படம் பண்ண  வெற்றிமாறனும் ஆசைப்படுகிறார், தளபதியும் விரும்புகிறார். அதற்கான நாள் கூடிய விரைவில் கைகூடும் என்றே சொல்லப்படுகிறது. அண்மையில் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் சூரி மற்றும் சூர்யாவின் வாடிவாசல் படத்தை முடித்துவிட்டு விஜய்யுடன் படம் பண்ணப் போவது உறுதி என்று கூறியுள்ளார்.

vijay vetrimaran movie update

உண்மையில் இந்த செய்தி விஜய்  மட்டுமல்லாமல் மொத்த திரைஉலகினரையும் ஆர்வம் அடைய செய்துள்ளது. விஜய்யும் அதற்கு முன்னர் தளபதி 65, தளபதி 66 படங்களை முடித்துவிடுவார். கண்டிப்பாக இந்த கூட்டணி தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் படி அமையும் என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

vijay vetrimaran movie update

விஜய்யும் வெற்றிமாறன் போன்ற தரமான இயக்குனர்களின் படங்களில் நடித்தால் தான் அவருடைய நடிப்பாற்றல் என்ன என்று அனைவருக்கும் தெரியவரும். நடிகர் விஜய்க்கும் வெற்றிமாறனை விட்டால் தனது நடிப்பை வெளிப்படுத்த வேறு ஒரு சிறந்த இயக்குனர் கிடைப்பாரா என்பது சந்தேகம் தான். எனவே இந்த வாய்ப்பை விஜய் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

vijay vetrimaran movie update