Spellbound

அடங்கப்பா! 140 கோடியில் விஜய் கட்டிய பங்களா! தோண்டத் தோண்ட கொட்டும் புதையல்! ஏற்கனவே குடியிருந்த வீடு இடித்து தரைமட்டம்!

Dec 27 2020 06:06:00 PM

பத்து வருடங்களுக்கு முன்பு பெட்டிக்கடைகளில் சின்ன மினி டைரி விற்பனையாகும். அதில் பிரபலமான நடிகர்களின் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். எனக்கு தெரிந்து நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, விஜய் வீடு சென்னை சாலிக்கிராமத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு அந்த வீட்டை நடிகர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு, அடையாரில் அம்மா, அப்பாவுடன் குடியேறினார். பிறகு குழந்தைகள் பிறந்தவுடன் தனிக்குடித்தனம் போக முடிவெடுத்து, நீலாங்கரையில் வீடு கட்டி அங்கு குடியேறினார்.

actor-vijay vijay-house vijay-home

ரொம்ப நாள் அதே வீட்டில் வசித்து வந்த நிலையில், மீண்டும் பனையூரில் பிரம்மாண்டமாக ஒரு வீடு கட்டி அங்கு குடியேறினார். நீலாங்கரை வீடு வாஸ்து சரியில்லையா? என்னான்னு தெரியல, 2018 ஆம் ஆண்டு வாக்கில் நீலாங்கரை வீட்டை இடித்துவிட்டு, அங்கு புதிய வீடு கட்ட ஆரம்பித்தார். பிரபல அமெரிக்க ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ் பீச் ஹவுஸ் போல கட்டத்திட்டமிடப்பட்டு, அதே பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்க செலவிடப்பட்ட தொகையை கேட்டால் தலையே சுத்தும். சுமார் 140 கோடி ஆயிருக்காம்.

actor-vijay vijay-house vijay-home

சென்னைக்கு மிக அருகில் 50 இலட்சத்தில் வீடு வாங்கவே இங்க நாக்கு தள்ளுது. 140 கோடியில் வீடு என்றால், சினிமா அல்லது அரசியல் வருமானத்தில் மட்டுமே அது சாத்தியம். ஏற்கனவே பனையூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட வீடு, விஜய் இரசிகர் மண்டல தலைமை அலுவலகமாக செயல்படுகிறதாம். ஆகமொத்தம் சென்னை முழுக்க, விஜய் பெயரில் அசையா சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்.

actor-vijay vijay-house vijay-home

ஹாலிவுட் நடிகரின் வீட்டை பார்த்த தூண்டுதலால் விஜய் 140 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டினாலும், நடிகர் தனுஷ் போல, இதுவரை ஹாலிவுட் பக்கம் போகலாம் என்ற யோசனை வந்ததில்லை. ஏனென்றால், விஜய் மசாலா படங்களில் மட்டுமே நடிக்கக்கூடியவர். கமெர்சியல் ரீதியிலான படங்களில் நடித்தால் போதுமானது. ஆனால் ஹாலிவுட் படங்களில் நடிக்க இன்னும் நடிப்பு திறன் தேவை. கலவையான ரோல் ஏற்று நடிக்க வேண்டும். நடிப்பு திறமையை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால், தனக்கு வாய்த்த திறமையை எந்த இடத்தில் பிரயோகிக்க முடியுமோ, அங்கே மட்டும் கட்டிவிட்டு கம்முன்னு, ஜம்முன்னு இருக்கிறார்.