His & Her

#MaskIndia: விஜய்தேவரகொண்டா சமையலறையில்! என்ன வேலை செய்தாலும் குறை சொல்லும் அம்மா, புலம்பும் விஜய்!

Apr 25 2020 05:41:00 PM

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் BetheREALMAN சேலஞ் தீயாய் பரவி வருகிறது. இயக்குனர் ராஜமவுலி தொடங்கிவைத்த இந்த சவால் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என பெரிய ஹிரோக்களை கடந்து தற்போது விஜய்தேவரகொண்டாவிடம் வந்து நிற்கிறது. இந்த சவாலை ஏற்ற விஜய்தேவரகொண்டா, காலை எழுந்தது முதல் தான் என்ன வேலையெல்லாம் செய்கிறார் என்பதை காணொளியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய்தேவரகொண்டா எந்த வேலை செய்தாலும், அந்த வேலையை அவரது அம்மா மீண்டும் செய்யும்படி அமைந்துவிடுவதாகாவும், இரண்டு வேலையாக உள்ளது என அம்மா தன்னை குறை சொல்கிறார் என பதிவிட்டுள்ளார்.

BetheREALMAN

#MaskIndia: இதனையடுத்து விஜய்தேவரகொண்டா இந்த BetheREALMAN சவாலை நடிகர் துல்கர் சல்மாவிற்கு விடுத்துள்ளார். விரைவில் துல்கர் இதனை ஏற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவார் என எதிர்பார்க்கலாம்.