Out of Box

சச்சினுக்கு கொடுத்த வரிச்சலுகையை ஏன் விஜய்க்கு தர மறுக்கிறார்கள்? ஜிஎஸ்டி கட்டினால் வேறு எந்த வரியும் கட்டதேவையில்லை எனும்போது விஜய் மட்டும் இறக்குமதிவரி கட்டணுமா?

Jul 16 2021 10:03:00 AM

கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா பக்கம் வரி ஏய்ப்பு செய்துவிட்டார் விஜய் என, அவரை வஞ்சித்து வருகிறார்கள். '2012 இல் ரோல்ஸ் ராயல்ஸ் கார் வாங்கிய விஜய், அதற்கு வரி கட்டாமல் வரி சலுகை கேட்டுள்ளாரே? அது என்ன நியாயம்? 10 கோடி என்றாலுமே அவ்வளவு தொகை போட்டு கார் வாங்க காசு இருக்கு, அதற்கான வரியை கட்ட வேண்டும் என்றால் மட்டும் சலுகை கேட்பது என்ன நியாயம்? கார் வாங்க காசு இருக்கு? ஆனால் வரி கட்ட இல்லையா?' என இவ்வாறு பலர் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

vijai rolls-royce

ஆனால் உண்மை என்னவென்றால் விஜய் வரி கட்டாத காரணத்தால் தன்னுடைய ரோல்ஸ் ராயல்ஸ் காரை வெளியே எடுப்பதுவே இல்லையாம். பல வருடமாக துடைத்து வைக்க மட்டுமே அந்த காரை பய்னபடுத்தியுள்ளார். ஜிஎஸ்டி வரி கட்டிவிட்டால் மற்ற எவ்வித வரியும் கட்ட தேவையில்லை. விஜய் தான் ஜிஎஸ்டி வரி கட்டிவிட்டாரே? பிறகு ஏன் அவருக்கு இறக்குமதி வரி கேட்கிறார்கள்? என்றவாறு ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவாக கூறுவதை இணையத்தில் ஆங்காங்கு பார்க்க முடிகிறது. அவர்கள் கூறுவதும் சரிதான். ஜிஎஸ்டி வரி நடைமுறையில் கொண்டுவரப்பட்டதோ 2017, விஜய் தன்னுடைய காரை வாங்கிய ஆண்டோ 2012. அப்படி இருக்க எப்போதோ வாங்கிய காருக்கு எதிர்காலத்தில் போடும் சட்டம் எப்படி ஒத்துப்போகும்? 

vijai rolls-royce

சச்சின் ரோல்ஸ் ராயல்ஸ் கார் வாங்கிய போது, அவருக்கு மட்டும் வரிச்சலுகை கொடுத்துள்ளார்களே? அப்படியானால் விஜய்க்கும் கொடுக்க வேண்டியது தானே? என சில விஜய் ரசிகர்கள் குமுறுவதை பார்க்க முடிகிறது. அதுவும் ஒரு விதத்தில் நியாயம் தான். அவர் நாட்டிற்காக விளையாடினர். இவர் நாட்டுக்காக நடிக்கிறார் என வைத்துக்கொண்டால் கூட, இருவருமே ஊதியம் வாங்கிக்கொண்டு தானே தங்கள் வேலையை செய்கிறார்கள்? இருவருமே வரி விலக்கு பெறாமல் இருப்பது தானே சரியானது? 

vijai rolls-royce

எதிர்காலத்தில் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ள விஜய் இப்படி செய்யலாமா? இப்போதிருந்தே மாசற்று இருந்தால் தானே எதிர்காலத்தில் சரியான நேரத்தில் நினைத்ததை முடிக்க முடியும்? இப்போதே பாருங்கள். இறக்குமதிவரி கட்டவில்லை என்ற காரணத்திற்காக அவரை முடிந்தவரை டே*மேஜ் செய்துவிட்டார்கள். திரையுலகில் ஷங்கர், ஐசரி கணேஷ், கலாநிதி மாறன் என எல்லோருமே ரோல்ஸ் ராயல்ஸ் கார் வைத்துள்ளார்கள். ஆனால் எல்லோருமே வரிக்கட்டி தான் தன்னுடைய மகிழுந்தை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது, விஜய்க்கு மட்டும் வரிச்சலுகை கொடுத்தால் இனி வரும் நடிகர்கள், தொழில் அதிபர்கள் என எல்லோருமே வரிச்சலுகை கேட்க ஆரம்பித்துவிட மாட்டார்களா? அரசின் நிலை என்னவாவது? எத்தனை கோடி என்றாலும் அந்த காரை யோசிக்காமல் வாங்குபவர்கள், அதற்கான வரியை கட்டுவது என்றால் மட்டும் சிணுங்குகின்றார்களே?