Spellbound

யாரு சாமி நீங்க? இவங்களை எல்லாம் ஒலிம்பிக் செலக்சனுக்கு கூட உள்ள விட மாட்டாங்க! 4 நிமிஷம் வெச்ச கண்ணு வாங்காம பார்த்தேன்!

Feb 09 2021 01:40:00 PM

உலகம் முழுக்க பிரபலமான சாதனையாளர்களை விட, பெரிதும் பேசப்படாத திறமையாளர்களே அதிகம். உதாரணத்துக்கு ரொனால்டோவை விட சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை, ஆப்பிரிக்க நாடுகளில் தெருவுக்கு தெரு பார்க்க முடியும். ஆனால் அவர்கள் யாரும் உலக அளவில் பிரபலமாக ஜொலிப்பதில்லை. எல்லா தடைகளையும் கடந்து, காலம் நேரம் சரியாக அமைந்து, உசேன் போல்ட் போல, ஒரு சிலரே வெளி உலகிற்கு தலை காட்டுகின்றனர்.

talent video viral

நீங்க நம்புவீங்களான்னு தெரியல. ஒருமுறை நான் பார்த்த சர்கஸ்சில் வித்தை காட்டிய பொண்ணு, இதுவரையில் நான் வீடியோவில் கூட பார்க்காத ஜிம்னாஸ்டிக் அசைவுகளை மேற்கொண்டு அசத்தினார். அவரெல்லாம் ஒலிம்பிக்போட்டிகளில் கலந்து கொண்டால், தங்கப்பதக்கம் என்ன, தொடர்ந்து வாழ்க்கை முழுக்க பதக்கங்களை குவித்துக்கொண்டே இருக்க முடியும். ஆனால் அவர்களின் வாழ்க்கை வட்டம் ரொம்ப சிறியது. கூடாரத்திற்குள் தான், நம்முடைய வாழ்க்கை என்பதை முடிவு செய்து, அதற்குள் அவர்களின் திறமையை சுருக்கிக்கொண்டனர்.

talent video viral

இன்னைக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலகட்டத்தில், வீடியோக்கள் மிப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தி வருகின்றன. இரயில்வே பிளாட்பார்மில் அசத்தலாக பாடிய பெண்ணின் வீடியோவை பார்த்து, தேடிச்சென்று வாய்ப்பளிக்கிறார் இசையமைப்பாளர் ஒருவர். இந்த மாதிரி அதிசயங்கள் நடந்தால் மட்டுமே, அடித்தட்டு மக்களும், உச்ச நிலையை அடையும் கனவு, நனவாகும். சினிமாவில் ஒரு சின்ன காட்சியில் நடிக்க எவ்வளோ அல்லோல் படவேண்டி இருக்கும் என்பதை, அந்தக்காலத்தில் வாய்ப்பு தேடியவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

 

இன்னைக்கு யூடியூப் எளிதாக மேடை அமைத்துக்கொடுத்திருக்கிறது. அந்த மாதிரி, சமீபத்தில் ஒரு நான்கு நிமிட வீடியோ பார்த்தேன். அதில் செய்யப்படும் ஒவ்வொரு சாகசங்களும் உலகச்சாதனைக்கு நிகரானது. ஆனால் என்ன, அவர்கள் நாடோடிகளாக  ஊர் ஊராக சென்று வித்தை காட்டும் மக்கள் என்பதால், பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவர்களை மாதிரி ஆட்களை கொண்டாடவிட்டாலும், நம்முடைய பங்கிற்கு அவர்களை பிரபலப்படுத்தி, திறமைக்கு மதிப்பளிப்போம்.