Misc

#OMG: மரத்தில் ஏறிய பாம்பு பிணத்தை பார்த்தால் தான் இறங்கும் என்கிறார்களே அது உண்மையா? பின்னணியில் உள்ள காரணம்!

Aug 01 2020

பக்கத்து வீட்டில் மரங்கள் நிறைய இருக்கும். பார்க்கவே வண்ண மயமாக காட்சியளிக்கும். மதிய வேளையில் வயிறு புடைக்க உண்டு விட்டு, அப்படியே அந்த மரத்தடியில் கட்டில் போட்டு உறங்கினால் வரும் பாருங்க ஒரு தூக்கம் அது சொர்க்கம். ஆனால் சில நாட்களாக அந்த பக்கமே போகவில்லை. ஏதோ மரத்து மேல் பாம்பு ஏறிவிட்டதாம், மூன்று நாட்களாக இறங்கவே இல்லையாம். மரத்து மேல் ஏறி அடிக்கலாம் என பார்த்தால் மரத்தில் உள்ள பொந்துக்குள் சென்று விடுகிறது. அடிக்கடி கண்ணுக்கு தென்பட்டு கொண்டே இருக்கிறது.

untold-story insects

தற்போது தெருவில் இந்த விஷயம் தான் ஹாட் டாப்பிக். 'மரத்தில் ஏறிய பாம்பு பிணத்தை பார்த்தால் தான் இறங்குமாம்' என யாரோ கிளம்பிவிட்டார்கள். வீட்டுக்கார அம்மா வீட்டில் ஏதோ அபசகுனம் நடக்க போவது போல தெரிகிறது என ஒரு கூட்டம் கிளப்பிவிட்டார்கள். இதனாலே அந்த வீட்டுக்கார அம்மாவிற்க்கு பெரும் மன உளைச்சல். பாம்பு வந்தது கூட, அது பாட்டிற்கு ஒரு ஓரம் இருக்கும், இந்த புரளி பேர்வழிகள் கிளப்பும் பூகம்பம் இருக்கே! அப்பப்பா! எங்கு இருந்து தான் யோசிப்பார்களோ!

untold-story insects

எத்தனை மூட நம்பிக்கைகள். நல்ல பாம்பை கொன்றுவிட்டால், அந்த பாம்பு பழிவாங்க ஜென்மம் எடுத்து தொடரும். விஷத்தை வெளியே உமிழாத பாம்பு மாணிக்க கல்லை கக்கும். 80களில் தான் அப்படியொரு படம் எடுத்தார்கள் என்றால், இப்போதும் அப்படியே எடுத்தால் அப்டேட் ஆக வேண்டியது மக்களா கலைத்துறையா?

untold-story insects

குடிக்க தெரியாத பாம்பிற்கு லிட்டர் கணக்கில் பால் ஊற்றுவது. பால் சார்ந்த உணவுகளை உண்டால் பாம்பிற்கு செரிக்காது. உண்டால் உயிருக்கு ஆபத்து என அவைகளுக்கு தெரியும். நமக்கு தான் தெரிவதில்லை. அதன் உடலில் நீர் வற்றிப்போனால் மட்டுமே நீர் ஆகாரத்தை எடுத்துக்கொள்ளுமாம். இதுவும் அரிதே! பிறகு ஏன் காலம் காலமாக புற்றுக்கு பால் ஊற்றினார்கள் என்றால், புற்று என்பது பல பாம்புகள் வாழுமிடம் அப்போது எளிதாக இனப்பெருக்கமும் நடக்கும். பால் வாசனையானது பாம்புகளுக்கு இடையே உள்ள அந்த ஒருவித கவுச்சி மணத்தை குறைத்து அவற்றை குழப்பமடைய செய்யும். இதனால் மனிதர்கள் வாழுமிடம் அருகே பாம்பு அதிக எண்ணிக்கையில் இருப்பதுவும் குறையும்.

untold-story insects

மரத்தில் ஏறிய பாம்பு பிணத்தை பார்த்தால் தான் இறங்கும் என அப்பகுதி பெரியவர்களும் ஆணித்தனமாக  கூறியதால் தான் வீட்டில் பெரும் சலனம் ஏற்பட்டது. அதற்கு முன்பு வரை, தீயணைப்பு வீரர்களை அழைத்து பாம்பை எடுத்து விடலாம் என கூறிக்கொண்டு இருந்தவர்கள், இப்போது ஏதோ சாங்கியம் செய்ய வேண்டும் என அதற்காக தனியே காசை செலவழித்து கொண்டிருக்கிறார்கள்.

untold-story insects

மழைக்காலத்தில் இதமான இடத்தை தேடி ஊர்வன வருவது சகஜம். மரப்பொந்து அதற்கு தேவையான வசதியை தந்ததால் அங்கேயே டேரா போட்டுவிட்டது. அதற்கு போய் மரத்தை வெட்டிவிடலாம், சாங்கியம் செய்யணும் என சொல்வதை எல்லாம் என்ன சொவ்லது?