Spellbound

இந்தப்படத்தை எப்படி தவறவிட்டேன்! கர்ணன் படம் வந்த நேரத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்ட அருமையான படைப்பு! ஒருவராவது இதப்பார்த்திருப்பீங்களா?

Jul 22 2021 08:12:00 AM

பெரிய பெரிய ஸ்டார்களின் ஒண்ணுத்துக்கும் உதவாத, உப்பு சப்பில்லாத படங்களை கொண்டாடும் நாம், அதை காசு கொடுத்து திரையில் பார்த்து மேலும் அவர்களை கோடியில் புரள வைக்கிறோம். அந்த மாதிரியான படங்களில் மொக்கை பாட்டுக்கு வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த செலவழிக்கும் காசில் ஒரு சின்ன படமே எடுத்துவிடலாம். அப்படி சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தரமான எளிய படங்களை ஊக்குவித்து தமிழ் சினிமாவின் தரத்தை உலகறிய செய்ய வேண்டும்.

kayal-movie kayal-anandhi movie

ஒரு சின்ன பட்ஜெட் படம் வெளியாகும் நேரத்தில் பெரிய ஹீரோ நடித்த படம் வெளியானால் சோலி முடிஞ்சுது. படம் வந்த சுவடே தெரியாமல் போய்விடும். அந்த வகையில் கர்ணன் படம் வெளியான நேரத்தில் இந்தப்படத்தை தவறவிட்டதாக நினைக்கிறேன். எத்தனை பேருக்கு படத்தின் பெயராவது தெரியுமென தெரியவில்லை. சினிமா துறையில் பத்து பேர் வாழ்ந்தார்கள் என்றால் நூறு பேர் அடையாளம் தெரியாமல் காணமல் ஆக்கப்படுகின்றனர் என்பதே எதார்த்தமான உண்மை.

kayal-movie kayal-anandhi movie

அந்த வகையில், கர்ணன் படம் வெளியான நேரத்தில், கமலி From நடுகாவேரி என்ற ஒரு படமும் வெளியானது. எத்தனை பேருக்கு இந்தப்படம் பற்றி தெரியும்? பெரிய பட்ஜெட் படத்தில் ஒரு பாட்டுக்கு செலவழிக்கும் காசில் எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தின் கதாநாயகி, நாயகன் எல்லாம் கயல் ஆனந்திதான். சும்மா பெயருக்குன்னு ஒரு ஹீரோ இருப்பார். சமீபத்தில் நான் பார்த்ததில் சண்டைக் காட்சி, கலவரம் என்று எந்தவித தொந்தரவும் இல்லாத அருமையான படமாகும். குடும்பத்துடன் பார்க்க தரமான படம்.

kayal-movie kayal-anandhi movie

எந்தவிதமான வசதியும் இல்லாத கிராமத்திலிருந்து தான் நினைத்ததை அடைய கமலி என்ற பெண், ஒரு பெரிய இலக்கை நோக்கி பயணித்து எவ்வாறு வெற்றி காண்கிறாள் என்பது தான் கதையின் கரு. ஒரு வகையில் பெண் குழந்தைகளின் படிப்பின் அவசியத்தையும் இந்த படம் உணர்த்துகிறது. இந்த மாதிரி தமிழிலும் பல அபாரமான படங்கள் உள்ளது. அதுவும் தமிழில் நாம் கேள்விபடாத பல நல்ல படங்கள் ரசிகர்களாலேகுழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.