His & Her

20 வயது இளம் பெண்ணாகிய எனக்கு, அக்குளில் பிரவுன் நிறத்தில் லேசான முடி! ஷேவிங் செய்து அனுபவப்பட்ட அவஸ்தை? எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை!

May 14 2021 02:03:00 PM

நான் 20 வயதான இளம்பெண். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதே என்னுடைய அக்குள் பகுதியில் முடி வளர ஆரம்பித்துவிட்டது. பெண்களுக்கு 30 வயதுக்கு மேல் தான், லேசாக முடி வளர ஆரம்பிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு இந்த வயதிலேயே வளர ஆரம்பித்துவிட்டதால் கொஞ்சம் சங்கடமா இருக்கு. எந்தவொரு இறுக்கமான ஆடைகளையும், சுதந்திரமாக அணிய முடிவதில்லை. டைட்டான டாப்ஸ் போட்ட, அக்குள் கீழே ஈரமாகிவிடுகிறது.

hair women under-arm

பெண்கள் அக்குள் முடியை அகற்றியாக வேண்டும் என்பது தேவையே கிடையாது. என்னைப்போல, அக்குளில் முடிகள் அடர்ந்திருந்தால், அதில் வியர்வை தேங்கி, வாடையும், அரிப்பும் ஏற்படும். அதற்காகவே, அக்குள் முடியை அகற்ற வேண்டுமென்று கூறுகின்றனர். அதனை ஷேவிங் செய்வதால் கடினமாக வளரும் என்று என்னுடைய தோழிகள் நிறையப் பேர் பயமுறுத்துறாங்க. அவங்க சொல்வதற்கு பயந்தே, இன்னும் முழுவதுமாக அகற்றியதில்லை. 

hair women under-arm

எனக்கு ஷேவிங் செய்வதில் விருப்பமில்லை என்பதால், அளவாக ட்ரிம்மிங் செய்து கொண்டேன். அதன்பிறகு, அக்குளில் சோப் போடாமல், சுகந்த ஸ்நானப் பொடி என்ற குளியல் பொடியை பயன்படுத்தி வருகிறேன். அதனை பயன்படுத்தி காலை, இரவு என தினமும் இருவேளைகள் சுத்தம் செய்து வந்தாலே போதுமானது. வியர்வைத் தேக்கமோ, துர்வாடையோ இப்போது வரை இல்லை. ஆரம்பத்தில் இருந்த சங்கடம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது.

hair women under-arm

சுகந்த ஸ்நானப் பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். முதலில் எனக்கும் அதைப்பற்றித் தெரியாது. இணையத்தில் ஒரு அக்கா பகிர்ந்த அனுபவத்தை படித்து, அதைப்பற்றி தெரிந்துகொண்டேன். எனக்கு அக்குளில் இலேசான முடி மட்டுமே இருப்பதால், குளியல்பொடியைப் பயன்படுத்தி, சுத்தம் செய்வதால், எந்த பக்கவிளைவுகளும் உண்டாகவில்லை. இதுவே கடைகளில் விற்கப்படும் கிரீம் வாங்கி போட்டிருந்தால், அந்த இடம் முழுக்க கருமையாகியிருக்கும். இந்த மாதிரி முடி உள்ள பெண்கள், முடிந்த வரை பருத்தி ஆடை அணிந்துகொண்டால், வியர்வையினால் உண்டாகும், சிக்கல் வராது.