Misc

3 கிலோமீட்டருக்கு இரண்டாவது கியரில் மட்டுமே இயங்கும் லாரிகள்! தமிழகத்தின் அ திஅபாயமான அ மானுஸ்யம் நிறைந்த ஒரு இடம்!

Nov 19 2020 07:37:00 PM

எத்தனையோ முறை விளக்கம் கொடுக்கப்பட்டாலும், இன்றைய தேதி வரைக்கும் விறுவிறுப்பு குறைந்தபாடில்லை. எவ்வளவு தெளிவா சொன்னாலும், "நீங்க சும்மா வாயில சொல்லிட்டு போயிருவீங்க, நான் கண்ணாற பார்த்திருக்கிறேன்" என்கின்றனர் லாரி ஓட்டுனர்கள். தமிழகத்தில் அதிக விபத்து நடக்கும் பகுதி எதுவென கேட்டால், கண்ணைமூடிக்கொண்டு தொப்பூர் கணவாய் என்று கூறிவிடலாம். அந்த ரூட்டில் லாரி ஓட்டுற மாதிரி இருந்தாலே, குலை நடுங்கி போகின்றனர் லாரி டிரைவர்கள்.

thoppur lorry drivers

சேலம்-பெங்களூரு ஹைவேயில், ஒரு 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு தொப்பூர் கணவாய் நீளும். இந்த இடப்பட்ட தூரத்திற்கு ஆள் நடமாட்டமே கிடையாது. பகலில் லாரி இயக்குவதாக இருந்தால் கூட, இரண்டாவது கியருக்கு மேல் போடப்படுவதில்லை. தொப்பூர் கணவாயை கடப்பதற்குள் ஹார்ட் பீட் எகிற ஆரம்பிக்கும். லாரி டிரைவர்கள் நிதனமாக போனாலும், எதிரில் வரும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதக்கூடிய ஆபத்து உண்டு. அங்கே பயணிக்கும் ஒவ்வொரு நொடியும், திரில் நிறைந்ததாக இருக்கும்.

thoppur lorry drivers

சில நேரங்களில் லாரிக்கு முன்னால் ஒரு உருவம் தோன்றி மோதவது போல கிட்ட வந்து மறையுமாம். அந்த நேரம் பார்த்து லாரியை நொடிக்க நினைத்தால், மொத்த கட்டுப்பாட்டையும் இழந்து கவிழும். இந்த பகுதியில் ஆபத்து என கைநீட்டினால் கூட எந்த லாரி டிரைவர்களும், வண்டியை நிறுத்த மாட்டாங்க. கட்டுமஸ்தான உடல் கொண்டவர்களாக இருந்தாலும், தொப்பூர் கணவாயை கடக்கும் போது, அடிவயிற்றில் புளியை கரைக்கச்செய்யும். 

thoppur lorry drivers

கடந்த ஒரு ஆண்டுக்குள் அங்கு 40 விபத்துகளும், 50க்கும் மேற்பட்ட உயிர் இழப்புகளும், 300க்கும் மேற்பட்டோருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து ஒன்று புரிந்திருக்க வேண்டும். இவ்வளவு அம்மானுஷ்யம் நிறைந்தது என்ற விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகும், வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்கச்சொன்ன பிறகும் இத்தனை விபத்துகள் நடந்துள்ளது என்றால், கொஞ்சம் ஜெர்க் ஆகத்தானே செய்யும். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளைவு, சென்டர் மீடியன் உயரம் குறைவு தான் விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் கூறினாலும், டிரைவர்கள் சொல்லும் கதையைக்கேட்டால், அந்த வழியாக பயணிக்கவே தோணாது.

thoppur lorry drivers

இன்னமும் தொப்பூர் கணவாய் பற்றி தெரியாதவர்கள் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி பயணிக்க வந்தால், விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் குறிஞ்சி நகர் சுங்கசாவடியில் ஒலிப்பெருக்கியில் வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்க வேண்டும் என்றும், அபாயகரமான மலை சாலை உள்ளது என்றும் எச்சரிக்கிறார்கள்.