HotPicks

புரோக்கர்களை நம்பி ரியல் எஸ்ட்டேட் துறையில் முதலீடு செய்யலாமா? தமிழகம் முழுக்க அரங்கேறி வரும் மோ சடி! நேரடி பார்ட்டி தாங்க சேஃப்!

Feb 21 2021 02:04:00 PM

ரியல் எஸ்டேட் பிசினஸில் என்னென்ன மோ சடி நடக்கிறது? வாங்குபவராக இருந்து அலசி ஆராயும் போது என்னவெல்லாம் சொல்லி நம்மை உள்ளே வர வைக்கிறார்கள்? எல்லாவற்றையும் நம்பி உள்ளே போய் பார்த்தால் முக்கால்வாசி ஏ மாற்றமாக தான் இருக்கும். பெரும்பாலான நேரத்தில் பொழப்பை கெடுத்துக்கொண்டு, அங்கே போவோம். எதிர்ப்பர்த்து போவது ஒன்றாக இருக்கும், நடப்பது ஒன்றாக இருக்கும். அப்படி எங்களுக்கு நடந்த சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். முக்கியமாக  மெயின் ஏரியாவிலேயே உள்ளது என்பார்கள் போய் பார்த்தால், ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாக உள்ள இடத்தை நமது தலையில் கட்ட முயற்சி செய்வார்கள். 

real-estate-business business-techniques

வீடு கட்டி விற்பது இதனை விட மோசம். ஃப்ரன்ட் எலிவேஷனை காட்டி, தரம் குறைந்த non framed structure மற்றும் UPVC ஜன்னல் கதவுகளை போட்டு நம்மை ஏமாற்றுவார்கள். இதோடு தரமற்ற டைல்ஸ் தான் பதித்து கொடுப்பார்கள். சிறிய பொருளை கீழே போட்டால் கூட உ டைந்துவிடும். முக்கியமான ஜாயிண்ட் பேஸ்டுகள் ஒழுங்காக செய்யாமல், சில மாதத்திலே அதற்கு ஒழுகல் பி ரச்சனை வந்துவிடும். 

real-estate-business business-techniques

முக்கியமாக சில இடங்களில் சொல்லும் பொதுவான டயலாக், அடுத்தமாதம் அரசு இந்த இடத்தின் விலையை உயர்த்த உள்ளது. ஏனெனில் ஐந்து சாலை ரோடு வந்துவிடும். முக்கிய சாலையாக மாறிவிடும் என அளந்து கொண்டே போவார்கள். இது மாதிரியான தகவல்கள் பெரும்பாலான நேரத்தில் பொய்யாக தான் இருக்கும். அதனை உறுதிப்படுத்திக்கொள்ள, உங்களுக்கு தெரிந்த அரசு அதிகாரிகள் மூலம் அந்த பகுதியில் தரகர்கள் சொல்வதெல்லாம் உண்மையா என தீவிரமாக விசாரித்துக்கொள்ளுங்கள். 

real-estate-business business-techniques

சில பிரச்சனைகளுக்கு தீர்வே இருக்காது. அதில் ஒன்று அப்ரூவல் வருவதற்கு முன்னரே நம்மிடம் விற்றுவிட்டு, பி ரச்சனை வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அதில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். அடுத்து அந்த இடத்திற்கு இனாமாக பல பொருட்களை கொடுப்பார்கள், அதனை எல்லாம் நம்பி வாங்கினால் அந்த இடத்திற்கு அதிக காசுகொடுத்து வாங்குகிறோம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

real-estate-business business-techniques

முடிந்தவரை இடைத்தரகர் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், அவர்களது வீண் ஜம்பங்களுக்கும் தேவை இல்லாமல் செலவு செய்ய வேண்டி இருக்கும். வீடாக வாங்க ஆசைப்பட்டால், ஒரு வருஷம் முழுக்க பில்டர்களையே பராமரிக்குமாறு ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். நிலமோ வீடோ எது வாங்கினாலும் உங்களது ஆர்வத்தை அடக்கி வாசியுங்கள். இல்லையெனில் பேரம் பேசுவது ரொம்ப கஷ்டம்.