Misc

கோயிலில் கொடுக்கப்படும் எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? தப்பித்தவறி கூட அந்த விசயத்துக்கு கோயில் எலுமிச்சையை பயன்படுத்திடாதீங்க!

Jan 13 2022 04:24:00 PM

கோயிலில் இருந்து சாமிக்கு படைத்த எலுமிச்சை பழத்தை வீட்டுக்கு கொண்டு வந்தால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. சிலர் அதை வீட்டின் பூஜை அறையில் வைத்துவிடுவார்கள். சிலர் வண்டி அல்லது காரில் கட்டிவிடுவார்கள். சிலர் அதை ஜூஸ் போட்டு குடிப்பதும் உண்டு. இதில் எவையெல்லாம் சரி, எவையெல்லாம் தவறு என்பது குறித்து தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

temple-lemon

கோயிலில் இருந்து கொண்டு வரும் எலுமிச்சை பழத்தை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு உறங்குவதில் எந்த தவறும் இல்லை. இதனால் நமக்கு வரும் தீய கனவுகள் காணாமல் போகும். கோயிலில் சாமிக்கு படைக்கப்பட்ட எலுமிச்சையை வாங்கிவந்து வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தால் அது வீட்டில் தீய சக்திகளை அண்டவிடாமல் பாதுகாக்கும்.

temple-lemon

கோயில் எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடிப்பதில் தவறில்லை. ஆனால் அதில் உப்பு கலக்கக்கூடாது. கோயில் எலுமிச்சையை வைத்து திருஷ்டி சுற்றிப்போடக்கூடாது. அதற்கு வீட்டில் உள்ள எலுமிச்சையை தான் பயன்படுத்த வேண்டும். கோயில் எலுமிச்சையை வீட்டுக்கு கொண்டு வராமல் கோயிலிலேயே விட்டுவிட்டு வருவது தவறு. அதனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அதிர்ஷ்டம் வராமல் போகும். கோயிலில் இருந்து எடுத்து வரும் எலுமிச்சையை வீட்டுக்கு கொண்டு வந்து வைக்காமல் அதை வெளியே தூக்கி எறியக்கூடாது.

temple-lemon

எலுமிச்சை மட்டுமல்ல கோயிலில் கொடுக்கப்படும் எந்த பிரசாதத்தையும் கோயிலிலேயே விட்டுவிடக்கூடாது. சாமிக்கு படைத்து கொடுக்கப்படும் விபூதி, குங்குமம், எலுமிச்சை, பூ என அனைத்தையும் வீட்டுக்கு கொண்டு வருவது அவசியமாகும். கோயிலில் கொடுக்கப்படும் எலுமிச்சை மங்களகரமானது. அதை பத்திரமாக வீட்டில் வைத்துக்கொண்டால் குடும்பத்துக்கு சகல நன்மைகளும் கிடைக்கும். அது காய்ந்து போன பிறகு அதை வீட்டில் இருந்து அப்புறப்படுத்திவிடலாம். அதில் எந்த தவறும் இல்லை.கோயிலில் கொடுக்கப்படும் எலுமிச்சையை எப்படி பயன்படுத்த வேண்டும் என கோயில் பூசாரியிடம் கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி செயல்படுவது சிறந்தது.