His & Her

வெளியில் பேசவே ச ங்கடமா இருக்கு! மஞ்சள் கறை போவதற்கு தீர்வே இல்லையா? பற்களை பார்த்தே உங்க ஏரியா தண்ணீரின் தரத்தை சொல்லலாம்!

Apr 07 2021 12:38:00 PM

 மற்றவரிடம் பேசும்போது நம்ம பற்களில் மஞ்சள் கறை இருந்தால், நம்ம கிட்ட பேச தயங்குவார்கள். அதனாலேயே பற்களை வெண்மையாக்க வேண்டுமென்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். பற்களில் கறை இருந்தால், பா ன்பராக் போடுகிறவன், அதிகம் பீடி, சிகரெட் பிடிப்பவன் என்கிற தவறான சிந்தனைக்கு வந்து விடுகின்றனர். நாம் குடிக்கும் தண்ணீரில் புளோரைடு அதிகமாக இருந்தாலும் பற்கள் மஞ்சளாக மாற விட வாய்ப்பு உள்ளது.

tooth teeth-clean paste

என்னுடைய பூர்வீகம் ஈரோடு பக்கம் பெருந்துறை பகுதி. நான் சென்னையில் வசிக்கும் போது, பல் மருத்துவரிடம் சென்றபோது, பற்களை சோதித்து பார்த்துவிட்டு, அதனை ஒன்றும் செய்ய இயலாது என கூறிவிட்டார். எங்க ஊருக்கு பக்கத்தில் சாய ஆலைகள் நிறைந்திருக்கும். நாங்கள் பயன்படுத்தும் தண்ணீரில் புளோரைடு அதிகமாக இருப்பதால், இயற்கையாகவே பற்கள் மஞ்சள் நிறமாக மாறிவிட்டது. நான் சொல்வது பத்து வருடங்கள் முன்பு நடந்தது. இப்போது  மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், டீத் ப்ளிச்சிங் செய்து மஞ்சள் கறையை நீக்குகின்றனர்.

tooth teeth-clean paste

மஞ்சள் கறையை போக்க வீட்டிலேயே எளிதான முறையில் பற்பொடி தயாரிக்கலாம். காய்ந்த பெரிய நெல்லிக்காய் பொடி, கிராம்பு பொடி, உப்பு, நெல் உமியை எரித்து எடுத்த சாம்பல், கரித்தூள் இவற்றைக் கொண்டு சிறந்த பற்பொடி தயாரிக்கலாம். தேவைப்பட்டால் வேம்பு அல்லது ஆலமர பட்டையை காயவைத்து பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம். சாதாரணமாக பற்களை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டும், பிரெஷ்சும் பற்களுக்கு பாதிப்பையே உண்டாக்குகின்றன. 

tooth teeth-clean paste

எதிர்காலத்தில் மஞ்சள் கறை வராமல் இருக்க வேண்டும் என்றால் புளோரைடு, குளோரைடு, அயோடின், கால்சியம், சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை போதுமான அளவு, அன்றாட வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பற்களை சுத்தம் செய்ய சாதாரண அடுப்பு கரியும், உப்பும் கலந்த கலவை மிகச்சிறந்த பலனை கொடுக்கும். நாகரிகம் என்ற பெயரில் எப்போ பேஸ்ட் பயன்படுத்த ஆரம்பித்தோமோ அப்போதே வாய் சுகாதாரம் கெட்டுவிட்டது. பல் மருத்துவமனைகளும் பெருகிவிட்டது. யோசித்து பாருங்கள் பின்னால் உள்ள உண்மை புரியும்.