His & Her

கம்முனே இருக்க மாட்டாங்க! உடல் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டும், லைனிங் இல்லாத கருப்பு ஜாக்கெட்! பெண்கள் ஜாக்கெட் அணிவதில் செய்யும் தவறு என்ன?

Apr 27 2021 10:09:00 AM

ஆண்களுக்கு சட்டையின் உள்ளே ஒரே உள்ளாடை மட்டுமே.ஆனால் பெண்ணிற்கோ, மூன்றடுக்கு நிலையில் உடை அணிய வேண்டும். அதுவும் இந்த வெயில் காலத்தில், உள்ளே இருக்கும் வெப்ப அவஸ்தை சொல்லி முடியாது. தட்ப வெட்ப காரணமாக, நல்ல காட்டன் துணியில் சேலை மற்றும் ஜாக்கெட் அணிந்து கொள்ளலாம். ஆனால் இவை எல்லாமே சில்க், சிந்தெட்டிக் வேலைபாடுகளால் இன்னும் அடுக்கு அதிகமாகிறது. பொதுவாக எந்த இடத்தில் எந்த மாதிரியான ஜாக்கெட் அணிய வேண்டும் என்பது பெண்களுக்கு தெரியும்.

blouse jacket saree

விஷேசங்களுக்கு அலங்கார வேலைபாடுகளுடன், தடிமனான கிளாத்தில் ஆடை அணியும் அதே கிராமப்பெண்கள் தான், வெயிலில் நின்று வேலை செய்யும் போது, லேசான ஆடை அணிகின்றனர். முன்பெல்லாம் மெல்லிய ஆடைகள் என்றால், அது எந்த நிறத்தில் இருந்தாலும் உள்ளே லைனிங் துணி வைத்து தைக்கும் பழக்கம் இருந்தது. தற்சமயம் கடினமான வேலை செய்யும் பெண்கள், லைனிங் துணி வைத்து ஜாக்கெட் தைப்பதை தவிர்க்கின்றனர். 

blouse jacket saree

குறிப்பாக கறுப்பு நிற மெலிதான ஜாக்கெட், உடல் அங்கங்களை கண்ணாடி போல தெள்ளத்தெளிவாக காட்டும். அதனை உள்ளாடை இன்றி வெளியே அணிந்து சென்றால், முதுகு பகுதி முழுக்க அப்படியே தெரியும். கிட்டத்தட்ட ஜாக்கெட் அணிந்திருந்தாலும், அணியாதது போல தோற்றத்தை கொடுக்கும். இந்த மாதிரி அணிகிறார்கள் என அவர்களை குற்றம் சொல்லக்கூடாது. அடுப்பு சூட்டுக்கு அருகில் வேலை பார்க்கும் பல பெண்களுக்கு, இந்த மாதிரி ஆடை வசதியாக இருக்கும்.

blouse jacket saree

சில இடங்களில் இந்த மாதரியான ஜாக்கெட் அணியும் போது வித்தியாசமா பார்ப்பாங்க. பள்ளி, கல்லூரி பெண்கள் இந்த மாதிரி ஜாக்கெட் அணியக்கூடாது. கடினமான வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே இது ஏற்றது. தன்னை அழகாக காட்டிக்கொள்ள ஒரு பெண் பிடித்த ஆடையை அணிந்துகொள்ளலாம். யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. தான் அழகாய் இருக்கிறோம் என்று ஒரு பெண் உணர்வது, அவளுடைய தன்னம்பிக்கையைக் கூட்டும். ஆடை அணிவது மற்றவருக்காக அல்ல.