Spellbound

ச்சீ..! 'ஆண் மழையில் நனைந்தால் உ யிர்கள் உருவாகுமாம்' செ ன்சார் இல்லாத பிரிவு என்பதால் இவ்வளவு டார்க் பச்சையாகவா பேசுவீங்க?

Jun 10 2021 10:43:00 AM

சிறு பிள்ளையாக இருக்கும்போது, பாடலின் அர்த்தம் தெரியாமலே இசை நன்றாக உள்ளதென சில பாடல்களை சத்தமாக பாடிக்கொண்டு இருப்போம். விவரம் தெரியும் வயதில் 'அச்சோ! இதையா பொதுவெளியில் பாடிக்கொண்டு இருந்தோம்?' என பின்னாட்களில் முகம் சுளிப்போம். அப்படியுள்ள சில பாடல்களை தான் உங்களுக்காக இங்கு பட்டியலிட உள்ளேன். பொதுவெளியில் கா மத்தை பேச தயங்கும் கவிஞர்கள், பாடல் வாயிலாக பச்சையாக, அப த்தமாக பாடிவிடுகிறார்கள். அதற்கெல்லாம் நாம் போ ர்க்கொடி தூக்கினோமா?? குழந்தைகள் கூட அ பத்தமான பாடல்களை பாடிக்கொண்டு தான் உள்ளது. நாமும் ரசித்து கொண்டு தானே உள்ளோம்? பாடல்களில் சென் சார் வைப்பதில்லை என்பதால், கவிஞர்கள் கா மரசத்தை வாரிவழங்குகிறார்கள். 

tamil-songs vairamuthu

சிநேகிதனே பாடலில் 'ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் புகுத்தி சேவைகள் செய்ய வேண்டும்' என்ற வரிக்குறித்து உங்களுக்கு விளக்கம் வேண்டுமா?? நண்பர்களிடம் தோழிகளிடம் பேச கூ ச்சப்படும் விஷயத்தை, அசால்டாக இவ்வளவு வெளிப்படையாக சொல்லிவிட்டார் கவிஞர். 'புது வெள்ளை மழை பெய்கிறது' என்ற பூரிப்பில் பனிமலையை தான் காட்டுகிறார்கள். ஆனால் பாடல் முழுக்க உள்ள வரிகளை கேட்டால், கவிஞர் வேறு எதையோ சொல்ல வருகிறார் என்பதை உங்களால் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். 

tamil-songs vairamuthu

படையப்பா படத்தில் 'கண்ணால் எதையோ பார்த்தீக? காயா பழமா கேட்டீக' என்றபடி சொல்லும்போது, இப்படியா ஒரு ஆணும் பெண்ணும் பச் சையாக பேசிக்கொள்வார்கள் என்றவாறு ஒரு நிமிடம் யோசித்தீர்களா? 

tamil-songs vairamuthu

அந்நியன் படத்தில் ஐயங்காரு வீட்டு அழகே என்றபாடலில், 'வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும், ஆண் மழையில் நனைந்தால் உ யிர்கள் உருவாகும்' இதன் அர்த்தத்தை புரிந்து கொண்டீர்களா? இப்படி பல பாடல்களில் கவிஞர்கள், பேச்சு வாயிலாக வெளிப்படுத்த முடியாத தருணங்களை பாடல்களில் கிளுகிளுப்பு கலந்த பாணியில் உருவாக்கிவிடுகிறார்கள். பழங்கால கவிஞர்கள் முதல் இப்போதுள்ள கவிஞர்கள் வரை வெளியே சொல்ல கூச்சப்படும் விஷயத்தை கவிதையில் இலைமறைகாயாக மறைத்து வைத்து சொல்லிவிடுகிறார்கள். அந்த வரிகளுக்கு உண்டான அர்த்தம் தெரியும்போது, நாமும் வ யது வந்தோராக இருப்போம். பிறகு எப்படி ஆராயாமல் இருக்க முடியும்? இப்படி நீங்களும் கேள்விப்பட்ட இரட்டை அர்த்த பாடல்களின் வரிகள் இருந்தால், அதை எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.