Out of Box

காசிற்காக பெற்றவர்களை குழப்பிவிடும் தனியார் கல்லூரிகள்! வந்தவரை லாபம் என சுருட்டும் நிர்வாகம்! படிக்காத பெற்றோர்களை குறிவைத்து நடக்கும் வேலை!

Jul 20 2021 12:40:00 AM

கொ*ரோனா காரணமாக +2 படித்த மாணவர்களுக்கு தேர்வு, மதிப்பெண் வெளியீடு என எல்லாமே தாமதமாக தான வந்துள்ளது. இதனால் படிக்காத பெற்றோர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இன்று நடந்த ஒரு சம்பவம் உணர்த்தியது. இன்னும் கிராமத்து பகுதியில் உள்ள அப்பா, அம்மாக்களுக்கு சில நாட்டு நடப்புகள் தெரியாமல் இருப்பதால், தனியார் கல்லூரிகள் அவர்களது அறியாமையை பயன்படுத்தி கொண்டு அதை காசாக்க முயற்சி செய்து வருகிறது. 

tamil-parents tamilnadu-college

அப்படித்தான் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொள்ள போகிறேன். படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள் தன்னுடைய மகளது மதிப்பெண்ணிற்கு அரசு கல்லூரியே கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளாமல், இருக்கும் எல்லா தனியார் கல்லூரிகளிலும் சீட்டிற்காக முயற்சி செய்துள்ளனர். தன் மகள் ர*த்த பரிசோதனை செய்யும் படிக்க ஆசைப்படுவதாக கூறி தனியார் கல்லூரியில் அந்த படிப்பிற்கு முயற்சி செய்துள்ளனர். அப்படித்தான் தனியார் கல்லூரியில் அந்த படிப்பிற்கு ஒரு வருடத்திற்கு ஒன்றரை லட்சம் ஆகும் என கூறியுள்ளனர்.

tamil-parents tamilnadu-college

பள்ளி படிப்பு முடிக்கவே வசதி இல்லை என்பதால் தான், பத்தாவது வகுப்பில் பள்ளியிலே முதல் மாணவியாக வந்தும் கூட பன்னிரண்டாவது வகுப்பையும் அரசு பள்ளியிலே தொடந்துள்ளனர். மாணவி +2 விலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். இப்படிருக்க வருடம் ஒன்றரை லட்சம் கொடுத்து தனியார் கல்லூரியா என யோசித்துள்ளனர். 

tamil-parents tamilnadu-college

மகள் விரும்பும் ர*த்த பரிசோதனை படிப்பிற்கு நீட் எழுத வேண்டுமா? இல்லை கவுன்சிலிங் போட வேண்டுமா? என்பது குறித்த எந்தவித அறிவுமே இல்லாமல் இருந்துள்ளனர். மகளின் மார்க்கிற்கு தனியார் கல்லூரியில் எப்படியோ அரசு ஒதுக்கும் இடத்தில் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர்.  ஆனால் அங்கு ஃபீஸ் குறித்து விசாரிக்க சென்றவர்களை எப்படியெல்லாம் கல்லூரி நிர்வாகம் குழப்பிவிட்டுள்ளது என்றால், இவர்களது மகள் எடுத்துள்ள மார்க்கிற்கு அரசு ஒதுக்கும் சீட் கிடைப்பது மிகவும் அரிது என்பது போலவும் மகள் விரும்பும் படிப்பிற்கான சீட் வெறும் 3 தான் உள்ளது என்றும் விருப்பப்பட்டால் உடனே இன்றே ஐந்தாயிரம் கொடுத்து சீட் உங்களுக்கு தான் என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் கூறியுள்ளனர். இவர்களும் உடனே ஐந்தாயிரம் கட்டி சீட்டை *கன்பார்ம் செய்துள்ளனர். அடுத்த நாளே ஏழாயிரம் கட்ட வேண்டும். கட்டிய காசு திருப்பி கொடுக்க படாது என்றும் கூறியுள்ளனர். 

tamil-parents tamilnadu-college

மகளின் எதிர்காலம்கருதி ஐந்தாயிரம் பணத்தை கட்டியுள்ளனர். அடுத்து, அரசு மருத்துவ கல்லூரியிலும் ஒரு முறை விசாரித்து கொள்ளலாம் என செல்லவே அவர்கள் கவுன்சிலிங் இருக்கும் என்றும் ஃபிஸ் ஆனது, மூன்று வருடம் படித்து முடிக்கவே ஒரு லட்சம் தான் ஆகும் என்றவாறு கூறியுள்ளனர். ஆனால் தனியாரிலோ ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் ஆகும் என கூறியுள்ளார்கள். அதுமட்டும் அல்லாது மகளின் மார்க் குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். சில ஆசிரியர்களை கேட்டதும் அவர்களும் கவுன்சலிங் மூலம் கண்டிப்பாக மகளது மதிப்பெண்ணிற்கு கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்றவாறு நம்பிக்கை கொடுத்துள்ளனர். 

tamil-parents tamilnadu-college

படித்த பெற்றோர்களாக இருக்கட்டும், படிக்காத பெற்றோர்களாக இருக்கட்டும் எல்லோரும் செய்யும் பொதுவான தவறு தங்களது பிள்ளையின் படிப்பு பற்றி பார்த்த எல்லோரிடமும் அறிவுரை கேட்பது. நீங்க அறிவுரை கேட்கும் முன் அறிவுரை சொல்லும் நபரின் தகுதியை ஆராயுங்கள். ஏனெனில் முழுதாக தெரிந்தவன் பேச மாட்டான். அரைகுறையாக தெரிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான். தனியார் கல்லூரியில் தாங்கள் தேடும் குறிப்பிட்ட படிப்பு உள்ளது என தெரிந்து, அங்கு சென்று விசாரிக்கும் பெற்றோர்கள், ஏன் அரசு கல்லூரியில் சென்று விசாரிப்பதில்லை? 

tamil-parents tamilnadu-college

இன்று நமக்கு என்ன தகவல் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நொடியில் இணையம் வாயிலாக கிடைத்து விடுகிறது. தாங்கள் தேடும் படிப்பு எந்த அரசு கல்லூரியில் இருக்கிறது என்பது குறித்த தகவலும் இணையத்தில் தெளிவாக கிடைக்கிறது. தொலைபேசி எண் உட்பட எல்லா தகவலும் இணையத்தில் கண்டிப்பாக தெரியும். ஆனால் பிள்ளைகள் ஆகட்டும் பெற்றவர்களாக இருக்கட்டும் இணையத்தை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்களே தவிர வாழ்க்கைக்கு உபயோகமாக பயன்படுத்துவது இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. நமது இந்த அறியாமையை பலர் காசாக்க முயற்சி செய்கிறார்கள். உஷாராக செயல்படுங்கள்!