Spellbound

நாலு பாட்டை மட்டும் வச்சி மொத்தப்படத்தையும் காப்பாற்ற முடியாதுங்க! தரமான திரைக்கதையை நம்பி பாடலை கட் செய்த பிரபல தமிழ் திரைப்படங்கள்!

Jan 12 2022 02:37:00 PM

இந்திய சினிமாவில் பாடல் என்பது மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. பல படங்கள் நன்றாக ஓடவில்லை என்றாலும் அந்தப்படத்தில் இருக்கும் பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றால் அது படத்தை கொஞ்சம் காப்பாற்றிவிடும். உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப்படம் முதல் பாகம் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டதால் படத்தை அது ஓரளவுக்கு காப்பாற்றியது. ஆனால் எல்லா நேரங்களிலும் பாடலை நம்பியே படத்தை எடுக்க முடியாது. நம்முடைய தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுத்து அதை வெற்றிபெற வைப்பது சிம்ம சொப்பனம் போன்றதாகும். ஆனால் ஒரு சில தரமான படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்து பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப்படங்கள் குறித்து தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

 

1. அந்த நாள்

tami-movies no-songs

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் பண்டரிபாய் ஆகியோர் நடிப்பில் 1954ம் ஆண்டிலேயே வெளியான அந்த நாள் திரைப்படம் பாடல்கள் எதுவும் இல்லாமல் வெளியாகி ஆச்சர்யமூட்டியது. அந்தக்கால கட்டத்தில் திரைப்படங்களில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கூட இருக்கும். இருப்பினும் இந்தப்படம் பாடல்கள் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

2. குருதிப்புனல்

tami-movies no-songs

கமல் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடித்த இந்தப்படத்தை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கியிருந்தார். பாடல் இல்லாமல் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படங்களில் குருதிப்புனல் படத்துக்கு முக்கியமான இடம் உள்ளது.

 

3. ஷாக்

tami-movies no-songs

பிரசாந்த் மற்றும் மீனா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான இந்தப்படம் வசூல் ரீதியாக தோல்விப்படமாக அமைந்தாலும் முதல் முறை பார்க்கும்போது ஒரு சுவாரசியத்தை தரும் படமாக இருக்கும். இந்தப்படத்தில் பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

 

4. உன்னைப்போல் ஒருவன்

tami-movies no-songs

கமல் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் பாடல்கள் எதுவும் இல்லாமல் வெளியாகி வெற்றபெற்ற திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது. இந்தப்படத்தில் கமலின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்படும் விதத்தில் அமைந்தது.

 

5. ஆரண்ய காண்டம்

tami-movies no-songs

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்தப்படத்துக்காக தயார் செய்யப்பட்ட மூடுபனிக்குள் என்ற பாடல் தான் திருடன் போலீஸ் படத்தில் பயன்படுத்தப்பட்டது.

 

6. பயணம்

tami-movies no-songs

நாகார்ஜூனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த பயணம் திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டிருந்ததால் படத்தில் எந்த இடத்திலும் பாடல்களை சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று இயக்குனர் ராதா மோகன் தெரிவித்திருந்தார்.

 

7. நடுநிசி நாய்கள்

tami-movies no-songs

கெளதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய படங்களில் ஏகப்பட்ட காதல் பாடல்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அனல் அவர் ரூட்டை மாற்றி பாடல்கள் இன்றி எடுத்த படமான நடுநிசி நாய்கள் படம் பெரிதாக ஓடவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.

 

8. விசாரணை

tami-movies no-songs

இயக்குனர் வெற்றிமாறனின் அற்புதமான படைப்பான விசாரணை படம் பாடல்கள் இல்லாமலே மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்தது. அற்புதமான திரைக்கதை இருந்தால் பாடல்களுக்கு எந்த அவசியமும் இருக்காது என்பதற்கு இந்தப்படம் சிறந்த உதாரணம்.

 

9. துப்பறிவாளன்

tami-movies no-songs

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் மாறுபட்ட கதையுடன் அமைந்து சூப்பரான வெற்றியை பெற்றுத்தந்தது. sherlock holmes என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் இந்தப்படத்தில் விஷாலின் நடிப்பு பிரமாதமாக இருந்ததால் பாடல்களை சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

 

10. கைதி

tami-movies no-songs

பாடல்கள் எதுவும் இன்றி வெளியாகி பட்டையை கிளப்பிய கைதி திரைப்படம் பல புதுமுக இயக்குனர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் விதத்தில் அமைந்தது. காதல் பாடல்களில் கார்த்தி நடித்த படங்கள் கூட இந்தப்படம் அளவுக்கு வெற்றிபெறவில்லை. பாடல்கள் இன்றி வெளியான படங்களில் எனக்கு தெரிந்த சில படங்களை கூறியுள்ளேன். இது தவிர வேறு ஏதேனும் படங்கள் இருந்தாலும் கூறுங்கள், அதையும் பட்டியலில் இணைந்து விடலாம்.