Spellbound

ஒரு தமிழ் படம் பார்க்கும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திருப்தி படுத்தும் என்றால் அது என்ன படமாக இருக்கும்? உண்மையில் இந்த படத்தை எந்த ரசிகரும் வெ றுக்க மாட்டார்கள்!

Jun 10 2021 12:05:00 PM

தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகி இருக்கும். ஆனால் அந்த படங்களில் எல்லா ரசிகர்களையும் திருப்தி படுத்தும் படங்கள் என்றால் அவை விரல் விட்டு எண்ணும் படி சில படங்கள் மட்டும்தான் இருக்கும். அந்த வகையில் அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்திய ஒரு படம் என்றால் அது அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படம் பாகம் 1.

tamil movie ultimate comedy

மனுஷன் என்னவா நடிச்சுருப்பாரு தெரியுமா? ஒரு படத்தில் லிவிங்ஸ்டன் சொல்லுவாரு, டேய் இவன் குடுத்த காச விட ரொம்ப அதிகமா கத்துறாண்டா என்று. அந்த மாதிரி இவருக்கு குடுத்த சம்பளத்தை விட 10 மடங்கு சிறப்பாக நடித்திருப்பார். ஒரு நடிகர் முதல் காட்சியில் ரஜினியாக நடிக்க வேண்டும், அடுத்த காட்சியில் கமலஹாசனாக நடிக்க வேண்டும், இப்படி படம் முழுவதும் எல்லா நடிகர் மாதிரி நடிக்க வேண்டும் என்றால் அது நம்ம அண்ணன் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவால் மட்டும் தான் அப்படி நடிக்க முடியும்.

tamil movie ultimate comedy

ஆஸ்கார் விருது இவருக்கு கிடைக்கும் என இந்திய திரையுலகமே எதிர்பார்த்தது. சிலரின் ச தி வேலைகளால் அந்த விருது சிவாவுக்கு கிடைக்காமல் போனது. முதன்முறையாக தான் விரும்பும் நடிகரை இன்னொரு நடிகர் திரையில் கிண்டல் செய்வதை ரசிகர்கள் கைத் தட்டி விசில் அடித்து கொண்டாடியது இந்த படத்துக்கு மட்டும் தான். ஜீரோ கேட்டர்ஸ் உள்ள படம் என்றால் அது தமிழ் படம் 1 தான். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தமிழ் படம் 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை முதல் பாகம் அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை.

tamil movie ultimate comedy

சினிமாவில் எப்போதும் ரௌடிசம் கொண்ட படங்கள் தான் அதிக அளவில் வெளியாகும். களவாணித்தனம் வேறு ரௌடிசம் வேறு என்பதை மக்களுக்கு உணர்த்திய ஒரு படம் தான் களவாணி. விமல் இந்த படத்தில் களவாணி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று சொல்வதை விட களவாணியாகவே வாழ்ந்திருப்பார். கிராமத்தில் ஒரு பையன் ஒரு பெண்ணை காதலிக்க என்னென்ன களவாணித்தனங்களில் இறங்குவார் என்பதை சிறப்பாக படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

tamil movie ultimate comedy

களவாணி படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகியது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு யாராலும் ரசிக்கப்படவில்லை. இந்த இரண்டு படங்களும் எப்போது நாம் டிவி யில் பார்த்தாலும் முதல் தடவை பார்ப்பது போலவே திரும்பத்திரும்ப பார்க்கத் தோன்றும். அந்த அளவுக்கு இந்த படங்களுக்கு ஜீரோ கேட்டர்ஸ் உள்ளனர். கலகலப்பு, கலகலப்பு 2, மேட்டுக்குடி இன்னும் நிறைய காமெடி படங்கள் எத்தனை முறை டிவியில் போட்டாலும் முதல் முறை பார்ப்பது போல ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

tamil movie ultimate comedy