Spellbound

#Cinema: தமிழ் சினிமாவில் மோசமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்! பார்க்கவே சகிக்கல!

Aug 01 2020

நடிப்பு என்பது தனிக்கலை. அதை கொலைசெய்யும் அளவுக்கு ஒரு சிலரின் நடிப்பு இருப்பதை காணும் போது, ஏன்டா இந்த படத்தை பார்க்க வந்தோம் என்கிற மாதிரியான உணர்வு ஏற்படுகிறது. அவர்கள் இரசிகர்கள் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம், அவர் கஷ்டப்பட்டு நடிக்கிறார் என்று. ஆனால் நம்மை கஷ்டப்படுத்துகிறார் என்பதே நிதர்சன உண்மை. மிதம்மிஞ்சிய ஹீரோயிசம், ஓவர் பில்டப், தெனாவெட்டாக இழுத்து பேசுவது, காமெடி செய்கிறேன் என்ற பெயரில் மொக்கை போடுவதெல்லாம் பார்த்தால், சுரீரென்று கோவம் வருகிறது.

vijay rajini kamal

ஒரு சிலருக்கு இயல்பாகவே நடிக்க வரும். சிலருக்கு சுட்டுப்போட்டாலும் நடிப்பு வராது. தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும், வாரிசு கோட்டாவில் வந்த நடிகர்களே அதிகம். அதில் வெகு சிலரே தனித்துவமான நடிப்பின் மூலம், சினிமா துறையில் நிலைத்து நிற்க முடிந்தது. மீதி எல்லாம் ஒப்புக்கு, ஏதோ ஒரு சில படங்களில் நடித்துவிட்டு நடையை காட்டி விடுகின்றனர். தொடக்கத்தில் சுமாராக நடித்துவிட்டு, போகப்போக பொழந்து கட்டிய வரலாறும் உண்டு. நடிகை ராதிகாவுக்கு ஆரம்பத்தில் சுத்தமாக நடிக்கவே வராதாம்.

vijay rajini kamal

ரஜினி படங்களை எடுத்துக்கொண்டால், சிறிய காட்சியாக இருந்தாலும், மக்கள் இரசிக்கும் அளவுக்கு நெளிவு சுளிவுகளோடு முகத்தில் ரியாக்சனை வெளிப்படுத்துவாராம். அதனாலேயே அவரது படங்களில் தனித்துவம் மிளிர்கிறது. ஆனால் கமல் முகத்தில் எந்த ரியாக்சனும் இருக்காது. நான் தான் அறிவாளி என்கிற பாணியிலேயே நடிப்பார். வசனங்களுக்கு அழுத்தம் கொடுத்து நடிக்கக்கூடியவர் கமல். இப்படி ஒவ்வொருவரிடமும் ஒரு குறைஇருந்தாலும், திறமையை வைத்து பார்க்கும் போது, குறைகள் பெரிதாக கண்ணில் படுவதில்லை.

vijay rajini kamal

இதில் எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால், பிகில் படத்தில் அப்பா விஜய் கேரக்டர். இந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் கூட, விஜயின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டிருக்கும். அப்பா விஜய் கேரக்டரில் வரும் விஜயின் நடிப்பை பார்க்கவே சகிக்கலை. இதற்கு முன்னால் பல படங்களில், வேறு சில நடிகர்களின் மோசமான நடிப்பை பார்த்திருக்கிறேன். பிகில் பார்த்த பின்பு, பழசெல்லாம் மறந்து போச்சு. ஒவர் ஹிப் தந்து ஏற்றி விட்டார்களா.? என்ற சந்தேகம் எழுகிறது. இது குறை சொல்வதற்கு கூறப்பட்டதில்லை. வேலை அறிந்து சரியான கருவி பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.