Out of Box

#tamanna: கொடுமை! ஒவ்வொரு முறையும் நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு, மேடைக்கு அழைக்கப்பட்டு வெறும் கையுடன் அசிங்கப்பட்ட தமன்னா!

Jul 28 2020

நடிகர் சுஷாந்த் இறந்தது முதலே நெபோட்டிசம் என்ற வார்த்தை இந்திய சினிமா மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படாமல் உறவுகள் காரணமாக சில நபர்களுக்கு மட்டும் அதிக வாய்ப்புகள் குவிவது. இதனால் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவும் புது முகங்கள் மறுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு செய்தி ஒவ்வொரு முறையும் தலை தூக்கும் போதும், உடனே காணாமல் போய்விடுகிறது. 'என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது' இந்திய சினிமாவில்!

tamanna nutty-natraj

உண்மையாகவே பாலிவுட் பக்கம் நெபோட்டிசம் இருப்பதாகவும் சல்மான் கானின் சகோதரர்கள் மற்றவர்களின் வாய்ப்பை தட்டி பறிப்பதாகவும் ஒரு பேச்சு அரசல் புரசலாக பேசப்படுத்தான் வருகிறது. அதுமட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மான் சல்மானின் படங்களுக்கு அதிகமாக இசையமைக்காமல் உள்ளதில் கூட உள்குத்து இருப்பது போல்தான் உள்ளது.  

tamanna nutty-natraj

இதனையடுத்து ஒவ்வொரு பிரபலமாக முன்வந்து 'என்னதான் நடக்கிறது உள்ளே' என்பதை உடைத்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது தமன்னா தனக்கும் நெபோட்டிசத்தால் அவமானம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் பலமுறை தன்னுடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டதாகவும் ஆனால் இறுதியில் வாரிசு நடிகர்களுக்கே விருதுகள் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். 

tamanna nutty-natraj

இது ஒருமுறை அல்ல பலமுறை தன் பெயர் விருது பட்டியலில் இடம் பெற்றதாவும் இறுதியாக வாரிசு நடிகர்களையே அது போய் சேர்வதாகவும் கூறியுள்ளார். கடின உழைப்பெல்லாம் அங்கு செல்லாது என்பது போல் தெரிவித்துள்ளார் தமன்னா. நல்லதா போச்சு! பாலிவுட்டில் தான் அந்த பிரிவினை நம்ம பக்கம் ஏதும் இல்லை என நினைத்து விடாதீர்கள். 

tamanna nutty-natraj

பாலிவுட்டே செல்லப்பெயர் வைத்து அழைக்கும் ஒளிப்பதிவாளரான நட்டி எனும் நட்ராஜ், தனது ட்விட்டர் பதிவில், 'தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல..  ஆனா குரூபிசம் இருக்கு...  யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத  யாரோ  நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க????' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவர் இப்படி கோபம் கலந்த ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளதை பார்த்தால் இவரும் எங்கோ யாராலோ பாதிக்கப்பட்டுள்ளார் என்பது போலத்தான் தெரிகிறது. 

tamanna nutty-natraj

ஒருமுறை நடிகர் சிவகார்த்திகேயன் கூட மேடையில் யாரையோ மறைமுகமாக சாடி இருந்தார். நினைவு இருக்கிறதா? 'வளரவிடுங்க, எவ்வளவு தான் தொல்லை கொடுப்பீங்க, யாரும் உதவி செய்யவேண்டாம். எங்களை எங்களது வேலையை மட்டும் செய்ய விடுங்க' என அழுத காணொளி நினைவு இருக்கிறதா?

tamanna nutty-natraj

பாலிவுட்டில் மட்டுமல்ல, கோலிவுட்டிலும் நெபோட்டிசமோ அல்லது நட்டி நடராஜ் சொன்னது போல் குரூபிசமோ இருப்பது தெளிவாகிறது. என்னமோ! ஏதோ ஒரு வகையில் திறமை ஒடுக்கப்பட்டு வருவது மட்டும் தெளிவாகிறது. இப்படியே போனால் பணம் ஒரே இடத்தில் மட்டும் குவியும், திறமையை வைத்து முன்னே வர காத்திருக்கும் கூட்டம் இறுதிவரை அடித்தட்டு மக்களாகவே இருப்பார்கள்.