His & Her

#Oh No: மேக்-அப் கலையாமல் மாஸ்க் அணிவது எப்படி? இந்த ரண களத்துலையும் ஒரு கிளுகிளுப்பு!

Mar 21 2020

கொரோனா தாக்கம் ஒரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டாலும், பயம் தான் நம் முதல் எதிரி; வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கும் மக்கள் பய உணர்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் கொரிய நாட்டு மக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் செய்தியை பார்த்து, மனதில் ஒரு வித பயத்தை உண்டாக்கி கொள்வதை விட, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதிலும், சுய கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவதை மட்டும் மக்கள் செய்து வந்தால் போதுமானது. இவ்வளவு நாள் சும்மாவே வெளியே போன மக்களுக்கு மாஸ்க் போட்டு நடக்க கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கும். பெண்கள் என்றால், மேக்-அப் போட்டு அதன்மேல் எப்படி மாஸ்க் போடுவது? என்ற குழப்பமும் இருக்கும். எல்லோரும் பயம் காட்டறாங்க, இப்போ இந்த சந்தேகம் வந்தால், இதன் இப்ப முக்கியமா? என்ற பேச்சு வரும். இதனை உணர்ந்த கொரிய பெண் ஒருவர், யாரோ என்னோ சொல்லிவிட்டு போகட்டும், மாஸ்க் அணிந்து கொண்டு மேக் அப் போடுவது எப்படி என்பது குறித்தும், மேக்-அப் கலையாமல் மாஸ்க் எப்படி அணிவது என்பது குறித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வைரலாகி வருகிறது.

மேக்-அப் கலையாமல் மாஸ்க் அணிவது எப்படி? 

#Oh No : எல்லாத்தையும் தெரிந்து கொண்டு மன இறுக்கமாக இருப்பதை விட, நமக்கு பிடித்ததை அறிந்து கொண்டு, மகிழ்ச்சியாக இருந்தால் வந்த நோய் கூட சீக்கிரம் குணமாகிவிடும்.

Top