Hugs & Kisses

கடைசி வரைக்கும் வீட்டோடு மாப்பிள்ளையாகவே காலத்தை ஓட்ட முடியுமா? சூடு, சொரணை தாண்டி வேறு என்னெவெல்லாம் அனுபவிக்கனும்?

Nov 21 2020 02:00:00 PM

தன்மானம் பார்ப்பவர்கள் வீட்டோடு மாப்பிள்ளை வேலை பார்ப்பது சிறிது சிரமமே. ஆனால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது, கேவலம் என்பது போல பார்ப்பது எல்லாம் சரியில்லை. அது ஒவ்வொரு குடும்பத்தின் சூழ்நிலையை பொறுத்தது. வேலைக்கு போகாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாலும், வீட்டோடு பிள்ளையாக இருந்தாலும் கோவம் வரத்தான் செய்யும். மாமியார் வீட்டில் குடித்தனம் நடத்தினாலும், கை நிறைய சம்பாதிக்கும் சமத்து மாப்பிள்ளையாக இருந்தால் யாரும், எதுவும் சொல்லப்போவதில்லை.

mother-in-law son-in-law family

தன்னுடைய உழைப்பை நம்பாமல், சதாகாலமும் இன்னொருவரின் தயவை எதிர்பார்த்து இருந்தால் தான் வீட்டோடு மாப்பிள்ளைகள் அசிங்கப்படுத்தப்படுகின்றனர். காலம் பூராவும் பிறந்த வீட்டிலும், மாமியார் வீட்டிலும் எங்கும் ஒட்டாமல், வயதான பின் தனியாக நிற்பார்கள். பிரச்சனை என்னும் போது நீங்கள் தனிக்குடும்பமாகக் கூடப் போகலாம். வீட்டோடு மாப்பிள்ளை எனில் நீங்கள் அடையாளமற்று போவீர்கள். ஒவ்வொன்றுக்கும் பிரச்சனைதான்.

mother-in-law son-in-law family

உங்களைப் பார்க்க உங்களது உறவினர்கள் நண்பர்கள் வருவதற்கு கூட அனுமதி வாங்க வேண்டி இருக்கும். இப்படி பல்வேறு பிரச்சனை வந்து நீங்கள் அடங்கிப் போக வேண்டும். அடங்க முடியாது என்றால் சாமியாராகப் போகவேண்டும். இதில் எது வசதி? வசதியான குடும்பமாக இருந்தால் ஓரமாய் ஒரு அறை, வேலைக்காரன் மூலம் சாப்பாடு. அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் போல ஒரு வாழ்க்கை. அதையெல்லாம் நினைத்துப்பார்த்தால், என்னடா வாழ்க்கை இது? என்கிற மாதிரியாகிவிடும்.

mother-in-law son-in-law family

எந்த வேலையும் செய்யாத வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால், சுய மரியாதை குறையும். பொறுப்புகள் அதிகமாகும். மனைவி அதிகாரம் செய்யலாம். கணவன் அடங்கிப்போக நேரிடும். தனியாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. எது செய்தாலும் விமர்சிக்கப்படலாம். குழந்தைகளிடம் உரிமை குறையலாம். சில நேரங்களில் குழந்தைகள் ஒதுக்கலாம். உறவினர்கள் முன்னிலையில் மரியாதை குறையலாம். இந்த மாதிரி பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.