His & Her

நிரந்தரமாக வி*யர்வை நா*ற்றம் வரக்கூடாதா? கிராமத்து பெண்கள் ஆற்றில் குளிக்கும்போது பயன்படுத்தும் நுட்பம்! நவநாகரீக பெண்களுக்கு இதெல்லாம் தெரியுமா?

Jul 16 2021 06:02:00 PM

முன்னரெல்லாம் கிராமத்தில் பூவந்திக் காய் அல்லது பூந்தி கொட்டை காய் மரம் என ஒன்று இருக்கும். இதனை நாங்க சோப்புக்காய் என்று தான் சொல்வோம். இப்போது ஆன்லைனில் கூட soap nuts என்று தான் விற்பனை செய்கிறார்கள். நாட்டும*ருந்து கடைகளில் கூட கிடைக்கும். சிகைக்காய் அரைத்து பின்னர் நுரை வர வேண்டும் இல்லையா? அதற்காக சிகைக்காய் உடன் இந்த பூந்தி கொட்டையின் மேல் தோலை தான் போட்டு அரைப்பார்கள். ஆமாங்க! இயற்கையாக நுரையை கொடுக்கும் அற்புதமான காய். முன்னரெல்லாம் கிராமத்தில் ஆற்றில் குளிக்க போகும்போது, சோப்பு எல்லாம் கிடையாது. 

soap-nuts boondi-kottai

ஆற்றின் அருகில் இருக்கும் பூந்தி கொட்டை மரத்தின் பூந்தி காயை பறித்து உ*டலுக்கு தேய்த்து கொள்வோம். நுரை பொங்கும். காய்ந்த காயை சிறிது நீரில் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம், துணி துவைக்கவும் பயன்படுத்தலாம். அம்மா துணி ஊறவைத்து துவைக்க இந்த பூந்தி காயை தான் பயன்படுத்துவார். அந்த காலத்தில் ஏது சோப்பு? சோப்பு வைத்திருக்கிறார்கள் என்றால் வசதியானவர்கள் தான் வைத்திருப்பார்கள். 

soap-nuts boondi-kottai

எந்தவித கெமிக்கலும் இல்லாத நுரையை கொடுக்கும் பூந்திக்காய். இப்போதும் நாட்டு ம*ருந்து கடைகளில் கிடைக்கிறது. இதனை போட்டு குளித்து பாருங்கள். மணம் அந்த நாள் முழுக்க உங்களையே சுற்றிவரும். மேனியில் உருவாகும் வி*யர்வையின் அளவு கட்டுக்குள் வரும். நாளடைவில் வாசனை திரவியம் பயன்படுத்தாமலே, நல்ல மணம் வீசும். உ*டலில் உள்ள அ*ழுக்குகளை அருமையாக வெளியேற்றிவிடும். இன்றும் கிராமத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சோப்பை பயன்படுத்த மாட்டார்கள், எல்லாமே பூந்தி கொட்டை காய் தான். 

soap-nuts boondi-kottai

ஒரு காலத்தில் பட்டுப் புடவையை வீட்டிலே பராமரிக்க பூந்திக்கொட்டை நுரை தான் பயன்படுத்தினார்கள். நகைகளையும் இது கொண்டு சுத்தம் செய்வார்கள். உங்களது உ*டலில் அதீத வி*யர்வை மணம் வருகிறது என்றால், முழுவதுமாக வாசனை திரவியத்தை நம்பி இருக்க விரும்பாதவர்கள், நிரந்தர தீர்வு வேண்டும் என்பவர்கள் ஒரு மாதம் பூந்தி கொட்டையை உ*டலுக்கு தேய்த்து குளிக்கும்போது, வெளியேறும் வி*யர்வை துளிகள் நாற்றம் இல்லாமல் வெளியேறும். முயற்சி செய்துவிட்டு, பலனை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.