Spellbound

ரெண்டு வருஷத்துக்கு சிவகார்த்திகேயனை குத்தகைக்கு எடுத்த சன் பிக்சர்ஸ்! இனி சிவகார்த்திகேயன் காட்டில் செம்ம மழை தான்!

Jun 10 2021 07:05:00 PM

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்துவருவது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இவர்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் தங்கள் தொழிலை சிறப்பாக நடத்தி வருவார்கள். அதுவும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரப்பவர்கள் சன் பிக்சர்ஸ் தான். முன்னணி நடிகர்களுக்கு இந்த கொ ரோனா காலத்தில் கோடிகளில் சம்பளத்தை அள்ளித் தருவதில் சன் பிக்சர்ஸை விட வேறு யாராலும் இது போன்ற செயல்களில் ஈடுபட முடியாது.

siva sun ictures movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, விஜய், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்களை வைத்து தற்போது சன் பிக்சர்ஸ் படம் தயாரித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏற்கனவே OTT யில் வெளியாக தயாராக உள்ள படம் டா க்டர். இந்த படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையையும் எங்கள் விஜய் டிவி நிறுவனத்துக்கே தரவேண்டும் என்று கேட்கிறதாம்.

siva sun ictures movie

ஆனால் ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவிக்கு விற்கப்பட்டுவிட்டது. எனவே எங்களால் சாட்டிலைட் உரிமத்தை தரமுடியாது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டதாம். அப்போது பேச்சு வார்த்தைக்கு சிவகார்த்திகேயன் சென்றிருந்தார். அந்த பேச்சு வார்த்தையில் அடுத்த தனது 5 படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

siva sun ictures movie

மொத்தம் 5 படங்களுக்கு சேர்த்து 75 கோடி சம்பளமாக பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு படத்துக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். முதல் படமாக தனது ஆஸ்தான டைரக்டர் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இனி சிவகார்த்திகேயன் படங்களுக்கு பெரிய அளவில் அவரே வந்து விளம்பரம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதான் சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்குறாங்கல்ல, அவங்களே எல்லா ப்ரோமோஷன் வேலையையும் பார்த்துக்குவாங்க என்ற சந்தோசத்தில் சிவகார்த்திகேயன் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

siva sun ictures movie