HotPicks

அடப்பாவிகளா.! நம்மூர் பருப்பு வடைய எப்படியெல்லாம் மாடுலேட் செய்து விற்கறாய்ங்க!

Feb 06 2020

அரபுநாட்டுல வேலை செய்யற என் பையன்  ஒரு  சாப்பாட்டு ராமன். போன லீவுக்கு வந்த போது, 'ஷவர்மா' னு ஏதோ ஒரு ஃபுட் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இது என்ன வகையான உணவுனு கூகுளை பார்த்தா,  சப்பாத்திக்குள்ள காய்கறி மற்றும்  இரண்டுநாளா வேக வைக்கிற கறியை எல்லாம் நிரப்பி கொடுக்கிறது தான் ஷவர்மானு கேள்விப்பட்டேன். இப்போ இந்த உணவை  பட்டி தொட்டி எல்லாம் விற்கறாய்ங்க! இந்த முறை லீவுக்கு வந்தவன்  ஃவலாஃவெல் (falafel) பற்றி ஆஹா ஓஹோனு பேச ஆரம்பிச்சுட்டான். 

இது என்னடா புதுசா இருக்குதேன்னு எப்போதும் போல நம்ம  கூகுள் கிட்ட கேட்டபோது  அது சொன்னது, ஃவலாஃவெல் என்பது சைவ உணவுதானாம். ஷவர்மா மாதிரி தான் எப்போதும் போல ரொட்டிக்குள் தாமியா, கொஞ்சம் மல்லித்தழை, பச்சை காய்கறிகளை உள்ளே அடக்கி கொடுப்பதுதானாம். 


 
இது முழுக்க முழுக்க சைவ உணவு என நினைக்க வேண்டாம். இந்த மெல்லிய ரொட்டிக்குள் முட்டை கலந்திருப்பார்களாம்.நம்மூர்ல இதை எங்கு தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. என் பையன் ஒருமுறை துபாயை சுற்றிப்பார்க்க வர சொன்னான். நான் இந்த ஃவலாஃவெல் (falafel) ருசிக்கவே அங்கு போனேன்.  அடடா..! என்ன ருசி..!  இந்த ரொட்டி பால்கோவை போல வாயில் போட்டதும் அப்படியே காணாமல் போயிடுச்சு. இத்தனை நாளா ஃவலாஃவெல்ங்கறது ரொட்டி நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் அது ஏதோ பிரெட் வகையாமே! அடுத்து இதுக்குள்ள இருந்த தாமியா பற்றி சொல்லணும். தாமியா, நம்மூரு பருப்பு வடை மாதிரிதான் இருந்தது.

பெருசா ஒன்னுமில்லை. சிக் பீஸ் பட்டாணியோட முழு பருப்பு ஊற வைத்து அதோடு எள்ளு பேஸ்ட்,  பூண்டு, கொத்தமல்லி மாதிரியே இருக்கும் பர்ஸ்லே  இலை இவற்றையெல்லாம்  அரைத்து நம்ம வடை போல் தட்டையாக இல்லாமல் உருண்டையா புடுச்சு பொரிச்சு எடுத்தா falafel ரெடி..! 

Top