HotPicks

பஞ்சு மிட்டாய் மாதிரி இட்லி வாயில் போட்ட உடனே கரைய வேண்டுமா? ஹோட்டல்களில் சீக்ரெட்டா கடைபிடிக்கப்படும் கிராமத்து கை பக்குவம்!

Jun 10 2021 09:40:00 PM

சில பேரு என்ன தான் பார்த்து பார்த்து மாவு அரைத்தாலும், இட்லி கல்லு மாதிரி இருக்கும். மாவு அரைக்கும் முறையில் கொஞ்சம் மாறுதல் செய்தால், எல்லோருக்குமே பஞ்சு மிட்டாய் மாதிரி மிருதுவான இட்லி வந்துவிடும். கிரைண்டரில் மாவு அரைக்கும் போது, சில ஐஸ் கட்டிகளை போட்டு அரைத்தால் மாவு சூடாகாது. இட்லிக்கு வெந்தயம் கொஞ்சமாகவும், தோசைக்கு வெந்தயம் அதிகமாகவும் சேர்க்க வேண்டும். இட்லி சுடுவதற்கு 8 முதல் 10 மணி நேரம் முன்னதாக மாவை அரைக்க வேண்டும்.

idly soft-idly kushbu-idly

காலை இட்லி என்றால், முன்தினம் மாலை அல்லது இரவுக்கு முன்னே மாவு அரைக்க வேண்டும். உளுந்து தனியாக, அரிசி தனியாக அரைத்து பிறகு கைகளால் கலக்கப்பட வேண்டும். ஒரு சிலர் இந்த நுணுக்கம் தெரியாமல் எல்லாமே ஒண்ணா போட்டு அரைப்பாங்க. சேர்த்து அரைத்தால் பஞ்சு போன்ற இட்லி கிடைக்காது. அரைத்த முதல் நாள்தான் இட்லி. மறுநாள் ஆகிவிட்டால் இட்லி கல் போல் தான் வரும். ஆகவே அது தோசைக்கு தான் நன்றாக இருக்கும்.

idly soft-idly kushbu-idly

இது தவிர, அரிசி மற்றும் உளுந்தின் மொத்த அளவில், நான்கின் ஒரு பாக அளவு திடமான அவலை அரிசியுடன் சேர்த்து ஊற வைத்து அரைத்து இட்லி செய்தாலும் மென்மையாக இருக்கும். எங்கள் வீட்டு இட்லி இந்த முறையில் தான் செய்யப்படும். இன்னொன்று கை பக்குவம் ரொம்ப முக்கியம்.  சிலரின் கை பட்டால் மாவு ரொம்ப புளித்து விடும். சிலரின் கை பட்டால் மாவு புளிகாமல் இட்லி நன்றாக இருக்கும். ஆண்களின் கைகள் உழைப்பால் உறுதியாகி தோல் முரடாக இருக்கும்.வியர்வை தோன்றாது. பெண்கள் கைகள் அவ்வாறு அல்ல. அவர்கள் கைகளால் கலக்கும் போது, இயற்கையான முறையில் மாவு புளிக்கும்.

idly soft-idly kushbu-idly

ஆனால் உணவகங்களில் மாவு புளிக்க பல காரணிகள் உண்டு. அதற்கு காரணம் சுத்தமில்லாமை. இப்போதெல்லாம் உடனடி மாவு பாக்கெட்களில் கலக்க, பல விதமான ஈஸ்ட்கள் வந்து விட்டன. ஹோட்டல் நடத்தும் நண்பர் இன்னொரு இரகசியமும் கூறினார். இட்லி மாவை புளித்தவுடன் அதை கரண்டியால் கலக்காமல், மாவை அப்படியே அள்ளி ஊற்றினால், இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும். பஞ்சு போல் இட்லி வருவதற்கு, சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்து பாருங்கள். ஜவ்வரிசியை அரிசி உளுந்து வெந்தயம் ஊர வைக்கும் பொழுதே ஊர வைக்க வேண்டும். இந்த மாதிரி நிறைய நுணுக்கங்களை கடைபிடித்தால், வீட்டில் தினமும் குஷ்பு இட்லி தான்.