HotPicks

#WoW: பதற்றமே வேண்டாம்! அடுத்த 21 நாட்கள் எவை எவையெல்லாம் இயங்கும்?

Mar 25 2020

கொரோனாவில் இருந்து நம்மை காக்க நாடு முழுவதும்  21 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. "என்னடா இப்படி ஆயிருச்சே" என்று பதற்றப்பட தேவையில்லை. இந்த அனுபவம் நமக்கு புதிது தான் என்றாலும், இதில் பயப்பட ஒன்றுமில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் இருக்கும். மக்கள் ஒரே இடத்தில் பல பேர் ஒன்று கூடுவதை தடுக்க தானே தவிர, மற்றபடி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. அடுத்து 21 நாட்களுக்கு பின்வரும் சேவைகள் எல்லாம் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.

your image

#1. அனைத்து விதமான மருத்துவமனைகள், மருந்தகங்கள், லேப், கிளினிக், காய்கறி, பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் விற்கும் கடைகள் இயங்கும்.

#2. இறைச்சி, மீன் மற்றும் விலங்குகளுக்கான உணவு விற்கும் கடைகள்திறந்திருக்கும்.

#3. வங்கி, காப்பீட்டு அலுவலகங்கள் ATM, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் இயங்கும்.

#4. தொலைபேசி, இணைய சேவை(Internet), மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும்.

#5. பெட்ரோல் பங்குகள், சிலிண்டர் எரிவாயு மையங்கள், மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான மையங்கள், கடன், பங்கு சந்தை தொடர்பான சில அலுவகங்கள் இயங்கும்.

#6. குளிர்சாதன கிடங்குகள், அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து, அத்தியவசிய பொருட்கள் உற்பத்தி மையங்கள் தொடர்ந்து செயல்படும்.

#7. தொடர்ந்து இயங்கவேண்டிய தொழிற்சாலை என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற்று இயங்கலாம்

#8. ஒரு சில ஹோட்டல்கள் (தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்குவதற்காக), மற்றும் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்காக இயங்கலாம்.

9. ஈமச்சடங்கு 20 நபர்களுக்கு குறையாமல் இருந்து நடத்தலாம். மற்ற சுப காரியங்கள், நிகழ்ச்சிகள் அனைத்து தடை செய்யப்பட்டுள்ளது.

#WoW: மற்ற படி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. கடன்கள், தவணைகள், இ.எம்.ஐ தொடர்பான அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Top