His & Her

இப்படி பப்ளிக்கா காட்டுறியே கண்ணம்மா! சின்ன சின்ன கயிறு முடிச்சில் சிலிர்த்துப்போன இளசுகள்! கவர்ச்சியை அள்ளி அப்பும் ஷில்பா மஞ்சுநாத்!

Sep 17 2020 11:40:00 PM

ஷில்பா மஞ்சுநாத்தா? அது யாருன்னு கேட்காதீங்க பிளீஸ்! என்னுடைய சமீபத்திய கிரெஸ் அவங்க. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் வரும்  "கண்ணம்மா உன்ன" பாட்டு கேட்டுருப்பீங்க தானே? அதில் வரும் அழகு பதுமை, எங்க தலைவி தான். எல்லோரும் படத்தில் நடித்து பிரபலம் ஆவாங்க. ஒரு சாங்கில் பிரபலமான நடிகை ஷில்பா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போறதா சொன்னாங்க. கடைசியில் நம்ம வச்சு கழுத்தறுத்துட்டாங்க மக்களே.

shilpa shilpa-manjunath actress

நூறு நாள் சைட் அடிக்கலாம்னு ஆசை ஆசையா காத்துக்கொண்டிருந்தேன். தேவை இல்லாத ஆளை எல்லாம் உள்ள கொண்டு வராங்க, ஆனால் ஷில்பாவிற்கு வாய்ப்பு இல்லையாம். போனா போகட்டும் அவருக்கு அழகு இல்லையா? திறமை இல்லையா? எல்லாமே இருக்கு. சீக்கிரம் வேற லெவலுக்கு வரப்போறாங்க. 2013 ஆம் ஆண்டிலேயே மிஸ் கர்நாடகா பட்டம் வாங்கி, அப்பவே ஒரு கன்னட தொலைக்காட்சியில் "லைப் சூப்பர் குரு" என்ற ரியாலிட்டி ஷோவில் கலக்கினவங்க. 

shilpa shilpa-manjunath actress

பிறகு 2016 ஆம் ஆண்டில் ஒரு கன்னட படத்திலும், 2018 ஆம் ஆண்டு மலையாளப்படத்திலும் நடித்த பின்னர், தொடர்ச்சியாக இரண்டு படங்களில் வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா தான். தமிழில் நடிகர் விஜய் ஆன்டனி நடித்த "காளி" திரைப்படத்தில் பார்வதி கேரக்டரில் நடித்தது பரவலாக பாராட்டை பெற்றது. 2019 ஆம் ஆண்டில் ஹரிஸ்கல்யாண் உடன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானதோடு, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலிலும் இணைந்தார்.

shilpa shilpa-manjunath actress

ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறை பின்னணியில் வளர்ந்தவர் என்பதால், ஆடை விஷயத்தில் எப்பவும் ட்ரெண்டி எதிர்பார்க்கலாம். நேரம் இருந்தால், இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு விசிட் அடித்துப்பாருங்க தெரியும். இப்போது கூட, பார்க்க குட்டி பாவாடை போன்ற டிஸைனில், வேலைபாடுகளுடன் கூடிய முடிச்சுகளுடன் ஷில்பா மஞ்சுநாத் அணிந்திருக்கும் ஆடை, இரசிகர்களை சில வினாடிகள் ஸ்டான்னாகி பார்க்கச்செய்கிறது. பிக்பாஸில் தான் வாய்ப்பு கிடைக்கல, இப்படியாவது பிரபலம் ஆகட்டும்.