HotPicks

#whitehouse: ஆடையின்றி குளிக்கும் அதிபரது ஆவி, எரிக்கப்பட்ட மாளிகை! பரம்பரை பரம்பரையாக வேலை செய்யும் பணியாட்கள்! ஒயிட் ஹவுஸ் குறித்து விலகாத மர்மம்!

May 15 2020 11:17:00 AM

நியோகிளாசிக்கல் கட்டட கலையில் உருவாகியுள்ள வெள்ளை மாளிகையானது, எப்போதுமே பார்க்க வியப்பு கலந்த பெருமையை கொடுத்து கொண்டே உள்ளது. வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட மாட்டோமா என எண்ணும் இந்த மாளிகை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.  

white-house trump abraham-lincoln

#1. அதிபர்கள் பதவி மாற்றம் நிகழும் வேளைக்கு சரியாக ஐந்து மணி நேரத்திற்கு முன்னர் தான் புதிதாக வரும் அதிபருக்கு ஏற்ற வகையில் மாளிகையில் மாற்றங்கள் செய்யப்படுமாம்.

#2. அதிபர்களுக்கு இந்த மாளிகையில் தங்குவதற்கு மட்டும் தான் கட்டணம் கிடையாது. மற்ற படி எல்லாவற்றிற்கும் கட்டணம் உண்டு. துணி துவைப்பது, சாப்பாடு, முடி வெட்டி கொள்வது என மற்ற அனைத்திற்க்கும் காசு கொடுத்தாக வேண்டும்.
 
#3. 1814 ல் பிரிட்டிஷ்காரர்களால் இந்த மாளிகை எரிக்கப்பட்டது. தற்போது உள்ள மாளிகையானது மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

#4. வெள்ளை மாளிகையில் வேலை அல்லது காலிப்பணியிடம் என வெளியாகும் விளம்பரம் வந்தால் நம்ப வேண்டாம். ஏனெனில் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் தலைமுறை தலைமுறையாக வந்தவர்கள்.

#5. வெள்ளை மாளிகையில் யாராவது இறந்துவிட்டால், அங்கு ஆவி உலவலாம் என்ற எண்ணம் அங்குள்ள அதிபரையும் தொற்றிக்கொண்டது. ஆம். அதிபராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள், லிங்கனின் அறையில் தங்க மறுத்துவிட்டாராம். ஏனெனில் லிங்கன் சாவில் மர்மம் நிலவுவதால்  இதனால் இந்த அச்சம் அதிபர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களையும் தொற்றி கொண்டது. 
ஏற்கனவே அங்குள்ள குளியலறையில் லிங்கனின் ஆவி ஆடையின்றி குளிப்பதாகவும் அதனை பலர் பார்த்ததாகவும் ஒரு தகவல் உலாவி கொண்டிருக்கிறது.

#whitehouse: இந்த மாளிகையில் வாரத்திற்கு 30,000 பார்வையாளர்கள், 65,000 கடிதங்கள், 3500 போன் கால்கள் என அனைத்திற்க்கும் பதில் வழங்கப்படுகிறது. அதிபராக இருந்தாலும் உங்களது செலவு என்றால், உங்களது சம்பளத்தில் இருந்துதான் பிடித்தம் செய்யப்படும் என அங்குள்ள விதி பிரமிப்படைய செய்கிறது.