Misc

ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் பாடத்துடன் சேர்த்து மதத்தையும் பரப்புவதாக புகார்கள் வருகின்றதே? இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?

Jun 13 2021 07:40:00 AM

மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்கள் தான் நம் வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய முக்கிய ஆசான்கள். கடவுளுக்கு முன்னரே நம் ஆசிரியரை தெய்வமாக வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு போதித்துள்ளனர். அந்த அளவுக்கு ஆசிரியர்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாதவர்கள். ஆனால் அந்த ஆசிரியர் தொழிலையும் கே வலப் படுத்தும்படி சிலர் நடந்து கொள்கின்றனர்.

school teaching skills

நம் நாட்டில் சில கிறிஸ்துவ பள்ளிகளும் உள்ளன. அந்த பள்ளிகளில் கிறிஸ்துவ மதத்தையும் சேர்த்து பாடத்துடன் புகுத்துகிறார்கள் என்ற கு ற்றச் சாட்டு இருந்துவருகிறது. மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் தங்கை கிறிஸ்துவப் பள்ளியில் படிப்பார். அவர் ஒரு கட்டத்தில் அந்த மதத்தை ரொம்ப பின்பற்றுவதைப்போல காட்சிகளை வைத்திருப்பார்கள். உண்மையில் எந்த பள்ளியாக இருந்தாலும் என்ன பாடம் எடுக்கவேண்டுமோ அதை மட்டும் மாணவர்களுக்கு எடுத்தால் போதும்.

school teaching skills

அதைவிட்டுவிட்டு அவங்க சாப்பிடும்போது ஜெபம் செய்ய வேண்டும், அதேபோல அந்த பள்ளியில் வேலைசெய்யும் அனைத்து ஆசிரியர்களும் கிறிஸ்துவர்களாக இருந்தால் மாணவர்களின் மனநிலை மாறத்தான் செய்யும். எப்போ பார்த்தாலும் உங்கள் கண்முன் தோன்றும் நபர் ஒரு குறிப்பிட்ட செயலை செய்துகொண்டே இருந்தால் கண்டிப்பாக சிறு குழந்தைகளின் மனம் ஊசல் ஆடத்தான் செய்யும்.

school teaching skills

எனக்குத் தெரிந்த ஒரு இந்து பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் தெரிந்த நண்பர் ஒருவர் படித்து வந்தார். அவர் நன்றாக படிப்பவர் என்பதால் அவரை அந்த பள்ளியில் அனைத்தும் இலவசமாகக் கொடுத்து அங்கேயே தங்க அனுமதி கொடுத்தனர். பெற்றோரும் நம் பையன் அங்கு நல்லா படிக்கிறான் என்று அசால்டாக விட்டுவிட்டார்கள். 3 வருடங்களுக்கு பின்னர் சென்று பார்த்தால் அந்த பையன் முழு சாமியாராகவே மாறிவிட்டான். இப்போ யார் என்ன சொல்லியும் கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. இப்போ அவனுக்கு திருமண வயது ஆகிறது.

school teaching skills

கல்யாணம் பண்ணிக்கோ என்று யார் சொன்னாலும் அவர் கேட்கும் மனநிலையில் இல்லை. குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறார்களோ அதுதான் அவர்கள் மனதில் பதியும். எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்போது அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கற்றுக்கொடுக்க வேண்டும். நம் பிள்ளை என்ன செய்கிறான் என்று பெற்றோர் கண்காணிக்க வேண்டும். எல்லாம் முடிந்த பின்னர் புலம்புவதில் எந்த பயனும் இல்லை.

school teaching skills