HotPicks

விட்டா எல்லாத்தையும் புடிங்கிருவாங்க போலயே! மக்களை முட்டாளாக மாற்றும் வியாபார தந்திரங்கள்!

Jun 21 2021 08:01:00 PM

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சதுரங்க வேட்டை என்னும் திரைப்படம் வெளியானது. அந்த படத்தை பார்த்த அனைவரும் இப்படி எல்லாமா மக்களை ஏமாற்றுவார்கள் என்று யோசிக்க வைத்தது. அப்படிப்பட்ட ஒரு படத்தை பார்த்த பின்னரும் இப்பவும் நிறைய பேர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நண்பர் ஒருவருக்கு வாட்சப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.

sathuranga vettai real life

அதாவது ஒருவர் ஏர்போர்ட் சுங்க அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவர் தன்னிடம் 10 ஐபோன் லேட்டஸ்ட் மொபைல் உள்ளது என்று சொல்கிறார். அந்த போனின் விலை ஒரு லட்சம் ரூபாய். அவர் 50000 ரூபாய்க்கு அந்த போனை தருகிறேன் என்று வாட்சப் மூலம் சொல்கிறார். நண்பர் எப்போதும் இணையதளத்தில் சுற்றித்திரிபவர். படித்தவர். விவரமானவர். இருந்தும் விலை மலிவாகக் கிடைக்கிறது என்று இரண்டு போனுக்கான பணத்தை அந்த நபரின் அக்கௌன்ட் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

sathuranga vettai real life

பணம் அனுப்பிய அடுத்த நிமிடமே சுங்க அலுவலரின் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. நண்பர் ஏமாந்துவிட்டார். ஏமாற்றிய நபரின் மொபைல் போன், அக்கௌன்ட் நம்பர் என அனைத்தும் போலியானவை. என்ன செய்தும் அந்த ஏமாற்றிய நபரை பிடிக்கமுடியவில்லை. வாட்சப் மற்றும் இணைய தளங்களில் உங்களுக்கு குறுகிய முதலீட்டில் தொழில் கற்றுக்கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

sathuranga vettai real life

அது என்ன குறுகிய முதலீடு? அந்த பணமே இல்லாமல் தொழில் கற்றுக்கொடுக்க வேண்டியது தானே? எல்லாமே மோ சடி தான். நாம் ஏமாறத் தயாராக இருந்தால் நம்மை ஏமாற்றுபவர்கள் எப்போதும் ரெடியாகவே இருப்பார்கள். ஒரு விஷயத்தில் இறங்கும் முன்னர் அது எந்த அளவுக்கு உண்மை என்பதில் யோசித்து செயல்பட வேண்டும். சதுரங்க வேட்டை படத்தில் சொல்வதைப்போல ஒருத்தன ஏமாத்தணும்னா அவனுடைய ஆசைகளை தூண்டி விடணும் என்பது தான் ஏமாற்றுபவர்களின் தொழில் ரகசியம். ஒரு விஷயத்தின் உண்மை நிலை தெரியாமல் நாம் ஆசைப்பட்டுவிட்டால் அந்த ஆசை உங்களை பேராபத்தில் கொண்டுசென்று விட்டுவிடும்.

sathuranga vettai real life