Misc

#burncalories: இந்த சவாலை ஏற்க தயாரா? இரண்டே நாளில் உடல் எடையில் ஏற்படும் மாற்றம்?

Feb 11 2020

ஒரே  மாதம் இரண்டே வழிமுறை, கணிசமான உடல் எடை குறைப்பு சாத்தியம். அடப்போயா! எல்லோரும் பத்தே நாளில் பத்து கிலோ குறைக்கலாம். விடிவதற்குள் இரண்டு கிலோ குறைக்கலாம்னு விளம்பரப்படுத்திட்டு இருக்கான். 'நீங்க என்னன்னா ஒரு மாசம் வரைக்கும் இழுக்குறீங்க'னு சொல்ற உங்க  மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்குது. உடனடியாக வெய்ட் லாஸ் செய்யும் எந்த முறையும் பாதகம் என்பதை புரியாத வரை விடிவதற்குள் இரண்டு கிலோ என்ன பத்து கிலோவே குறைக்கலாம்னு கூட சொல்வாங்க. ஒரே மாதத்தில் கணிசமான உடல் எடையை குறைக்கும் இரண்டு வழிகள்..

gym workout motivation calories

தொடர்ந்து  உடற்பயிற்சி செய்து வந்தால் முதலில் ஏற்படும் மாற்றம் ஆழ்ந்த தூக்கம் மற்றும் பசி. குறிப்பாக ஸ்ட்ரெச் பயிற்சி செய்துவரும் போது கொழுப்புகள் குறைந்து ரத்த ஓட்டம் அதிகரிப்பதை கவனிக்க முடியும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சியை மாதம் முழுக்க ஐந்து நிமிடம் செய்தாலே நல்ல மாற்றம் கிடைப்பதாக முயற்சி செய்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கிரஞ்ச், லெக் ரைஸ், பிளான்க் இந்த பயிற்சிகளை செய்துவந்தாலே உடல் நாளுக்கு நாள் இறுகி வலுப்பெறுகிறது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்  நடத்திய ஆய்வு ஒன்றில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது மன அமைதியை உருவாக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் புதிய நியூரோ செல்கள் அதிகமாக சுரக்கிறது என கண்டறிப்பட்டுள்ளது.

gym workout motivation calories

இதெல்லாம் மட்டும் போதுமா? தினமும் ஆறு லிட்டர் தண்ணீரை சரியான கால இடைவெளியில் குடிக்க வேண்டும். இது எல்லாவற்றையும் விட வைராக்கியம் தான் ரொம்ப முக்கியம். உடற்பயிற்சி செய்யும் போது, சருமத்துக்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எத்தனை ஒயிட்னிங் க்ரீம் பயன்படுத்தினாலும் கிடைக்காத பொலிவு, ஒரே வாரத்தில் ஒர்க் அவுட் செய்யும் போது கிடைக்கிறது என்பது அனுபவ ரீதியான உண்மை.  அடுத்து மிகவும் முக்கியமானது. பசிக்கும் போது மட்டுமே சாப்பிடுவது. அதாவது பசித்த உடனே உணவு உண்ணும் போது நாம் குறைவான அளவே உணவு எடுத்துக்கொள்வோம். நன்றாக பசித்து உண்ணும் போது அதிகமான உணவு எடுத்துக்கொள்வோம்.ஆக, எப்போது உணவு உண்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது.