HotPicks

அந்தக்கடையில் நயா பைசா கூட குறைக்கமாட்டாங்க! தங்கத்தை அடி த்து பேரம் பேசி வாங்குவது எப்படி? அனுபவத்தில் கண்ட இரகசியம்!

Nov 20 2020 06:41:00 PM

தங்க நகைக்கடைகள் உலகம் முழுக்க கிளைகளை திறக்கிறார்கள் என்றால், இலாபம் இல்லாமலா இருக்கும்? சாதாரண தெருவோர வியாபாரிகளிடம் பேரம் பேசும் நமக்கு, இந்த மாதிரி கடைகளுக்குள் போகும் போது, தைரியம் வருவதில்லை. நியாயமாக பார்த்தால் தெருவோர வியாபாரிகளுக்கு கேட்கும் தொகையை கொடுத்துவிட்டு, இது மாதிரியான கடைகளில் தான் பேரம் பேச வேண்டும். பேரம் என்றால், தங்கத்தின், அன்றைய விலையைக் குறைக்க முடியாது. எந்த கடையும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.

gold gold-price gold-rate

செய் கூலி, சேதாரம் அதிகம் என்று வாதிடலாம். எடை கணக்கில் கல் எடை சேர்க்கக் கூடாது எனலாம். எடுக்கும் ஆபரணத்தைப் பொறுத்து, சேதாரத்தின் மதிப்பை குறைத்துப் போடச்சொல்லி கேட்கலாம். பெரிய இடம், யாராச்சும் ஏதாவது நினைப்பார்களோ? என்ற கூச்சத்தைப் பார்க்காமல், பேரம் பேசினாலே பணம் மீதமாகும். என் அலுவலக தோழியுடன் நகை வாங்க சென்றிருந்த நேரத்தில், இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன். 

gold gold-price gold-rate

பிரபலாமான பல கடைகளில் சேதாரம் என அதிகமாக விலை போட்டுவிட்டு, யாராவது எதிர்கேள்வி கேட்டு, பேரம் பேசினால் மட்டும் விலை குறைத்து போடுகிறார்கள். அதுவும் எவ்வளவு தெரியுமா? 1 அல்லது 1.5 விழுக்காடு மட்டுமே. ஆனால் இப்படிப்பட்ட கடைகளில் தான் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் சொன்ன விலைக்கே தலையாட்டினால் குறைந்தது 500 ரூபாயாவது அதிகம் கொடுத்துவிட்டே கடையை விட்டு வெளியே வருவீர்கள்.

gold gold-price gold-rate

எனக்கு அருகில் இருந்த பெண், நான் இந்த கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று சொல்லி ரொம்ப நேரமாக போராடிக்கொண்டிருந்தார். கடை விற்பனையாளர்கள் என்ன சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. பிறகு கோட் சூட் போட்ட ஆசாமிகள் வந்து எது அவர் காதில் சொல்ல, புன்னகையுடன் ஒரு தொகையை கொடுத்துவிட்டு வெளியே வந்தார். வெளியே வந்த அவரிடம் நீங்க எவ்வளவு வருடமா இங்கே நகை வாங்குறீங்க என்று கேட்டேன். அவருக்கு இது தான் முதல் முறையாம். எந்த கடைக்கு போனாலும், ரெகுலர் கஸ்டமர் என்று சொல்லி பேரம் பேசினால், கணிசமான தொகை குறைக்கின்றனராம். அந்த பெண் பேசிய பேச்சுக்கு 800 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. பத்து ரூபாய் குறைக்கப்பட்டாலும் நமக்கு லாபம் தானே? என்னைக்கு நமக்கு அந்த தைரியம் வருதோ தெரியல.