Misc

101, 501, 1001 மொய் வைக்கும் போது 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன் தெரியுமா? அந்த கால ஆட்களுக்கு உ டம்பு முழுக்க மூ ளை இருந்திருக்கும் போலயே!

Mar 01 2021 07:35:00 PM

கல்யாணம், காதுகு த்து, கடா விருந்து என எந்த நிகழ்வாக இருந்தாலும் கிராமத்து பக்கம் மொய் வைக்கும் வழக்கம் இருக்கும். நகரம் என்றால் கிஃப்ட் வைப்பது வழக்கமாக இருக்கும். கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி தாய்மாமன் போன்ற பந்தத்தில் இருக்கும் உறவுகள் தாங்கள் செய்ய வேண்டிய சீர் வரிசைகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதோடு மொய் கண்டிப்பாக வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது, ஒரு லட்சத்து ஒரு ரூபாய், பத்தாயிரத்து ஒரு ரூபாய், நூற்று ஒரு ரூபாய் என இப்படி பெரிய பண தாள்களுடன் ஒரு ரூபாய் வைப்பார்கள் ஏன் தெரியுமா? 

moi-virundhu crowd-functin

நம்மூர் பக்கம் 101, 1001, 501 என வைப்பது போலவே, ஆந்திரா பக்கம் 516, 1016, 10016 என 16 ரூபாய் சேர்த்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படி 16 ரூபாய் சேர்த்து வைப்பது, 16 செல்வங்களை பெற ஆசிர்வதித்து அனுப்புவது போலவாம்.

moi-virundhu crowd-functin

நம்மூர் கதைக்கு வருவோம். அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில் தான் நாணயங்கள், பணமாக புழக்கத்தில் இருந்து வந்தன. திடீரென தாள்களுக்கு மாறியதால் அந்த காகிதம் மதிப்பு அற்றது என நினைத்துக்கொண்டு, கூடவே ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது, வெள்ளி நாணயம் வைப்பதற்கு சமமாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. அது ஏன் ஒரு ரூபாயாக வைக்க வேண்டும்? என்ற கேள்வி அடுத்து உங்க மனதில் கண்டிப்பாக எழும். இரட்டை படையில் உள்ள அந்த மொய் காசை பெரும்பாலான இரட்டை படை எண்களால் வகுத்தால் கண்டிப்பாக மீதி பூச்சியம் தான் வரும். அதுவே ஒற்றைப்படை மொய்யாக இருந்தால், கண்டிப்பாக மீதி வரும். எடுத்துக்காட்டாக 100/2=50, 101/2=50.5 

moi-virundhu crowd-functin

இதனால் சொந்தபந்தங்கள் எப்போதுமே முடிவின்றி, நீடிக்குமாம். இரட்டைப்படையில் மொய் வைத்தால் மொய் வைப்பவருக்கும் வாங்குபவருக்கு இடையே உறவு முடிந்துவிட்டது என்ற அர்த்தமாம். ஒரு ரூபாய் இல்லையென இரண்டு ரூபாய் வைத்து 502 ஆக மொய்வைக்க போய் நான் திட்டு வாங்கி கற்றுக்கொண்ட படம்.