Misc

#BetheREALMAN: இது என்ன புதுசா இருக்கு? இயக்குனர் ராஜமவுலி கிளப்பிவிட்ட சவால்! செய்ய தயாரா?

Apr 22 2020 08:35:00 PM

தெலுங்கு திரையுலக  பிரபலங்கள் மத்தியில் வைரலாக ஆரம்பித்துள்ள சவால் தான் 'Be The Real Man' சேலஞ். இதை துவங்கி வைத்த பெருமை இயக்குனர் ராஜமவுலியை தான் சேரும். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் தானே செய்வது தான் Be The Real Man சேலஞ். ராஜமவுலி, அவ்வாறே தன் வீட்டை சுத்தம் செய்த காணொளியை பதிவிட்டு தனது ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர், மற்றும் ராம்சரண் இருவரையும் செய்யுமாறு சேலஞ் செய்திருந்தார். இவரது இந்த சவாலை ஏற்ற  நடிகர்கள் தாங்கள் செய்த வீட்டு வேலைகளை வீடியோவாக பதிவிட்டு, ராஜமவுலி அவர்களின் சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என பதிவிட்டு தனது நட்பு வட்டாரத்தில் உள்ள சிலருக்கு  இதே சவாலை விடுத்துள்ளனர்.

tollywood

#BetheREALMAN: தெலுங்கு நடிகர்கள் மத்தியில் இந்த சேலஞ் வைரலாகி வரும் நிலையில், விரைவில் நம்மூர் பக்கமும் இது படையெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.