HotPicks

கைராசி டாக்டர் என வந்தால், பெரிய டாக்ட்டருக்கான ஃபீஸை வசூலித்துவிட்டு ஜூனியர் டாக்டரை பார்க்க அனுமதிப்பது சரியா? பெரிய ம ருத்துவமனைகளில் நடக்கும் கொ ள்ளை!

May 21 2021 05:06:00 PM

முதல் லா க்டவுன் முடிந்தது முதல் எல்லாமே விலை ஏறி போச்சு. குறிப்பாக டாக்டர் ஃபீஸ். வருடாவருடம் கண் ப ரிசோதனை செய்ய ம ருத்துவமனை செல்வது வழக்கம். அப்படிதான் முதல் லா கடவுன் முடிந்ததும் கண் பரிசோதனை செய்யலாம் என பிரபல கண்ம ருத்துவமனைக்கு சென்றோம். அங்கு ஃபீஸ் முன்னதை விட உயர்த்திவிட்டார்கள். சரி, கண் விஷயத்தில் காசு பார்க்க வேண்டாமென ம ருத்துவரை பார்க்க காத்துக்கொண்டிருந்தோம். அங்கு பணிபுரியும் பெண்களோ, டாக்ட்டரை பார்க்க முடியாது. புதிதாக வந்துள்ள டாக்டர் அம்மாவை தான் பார்க்கமுடியும் என்றார்கள். நாங்க போனிலே டோக்கன் போடும்போது கூட, டாக்டரை பார்க்க முடியாது. டாக்டர் அம்மாவை தான் பார்க்க முடியும் என்றார்கள். நாங்களோ டாக்ட்டரை தான் பார்க்க வேண்டும் என்றோம். சரி நேரமாக வாங்க பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள். 

real-life-experience erode

ஆனால் நேரமாக சென்றும் அந்த பெண்கள் மீண்டும் டாக்டரை பார்க்க முடியாது. புதிதாக வந்துள்ள டாக்டர் அம்மாவை தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள். என்ன இது? போனிலே நாங்க கேட்டு தானே வந்தோம். போனிலும் டாக்டர் அம்மாவை தான் பார்க்க முடியும் என வற்புறுத்துகிறீர்கள், நேரிலும் அதையே வற்புறுத்துகிறீர்கள் என குரலை உயர்த்தி பேசவும், சரிங்க சார் டாக்டரையே பார்த்துக்கொள்ளலாம் என சொல்கிறார்கள்.

real-life-experience erode

நமக்கு தான் அப்படி என்றால் அங்குவந்த பலருக்கும் புதிதாக வந்த டாக்டர் அம்மாவையே பார்க்க வற்புறுத்துகிறார்கள். டாக்டரை தான் பார்க்க வேண்டும் என அடமாக நிற்பவர்களை மட்டும் டாக்டரை பார்க்க அனுமதிக்கிறார்கள். மற்றவர்களை டாக்டரம்மாவை பார்க்கவே அனுமதிக்கிறார்கள். எதற்காக இப்படியென குழ ப்பத்தோடு கடந்துவிட்டோம்.

real-life-experience erode

லே சர் செய்ய உள்ளதால் ஒரு மாதம் கழித்து அதே ம ருத்துமனைக்கு சென்றோம். மீண்டும் அதே குளறுபடி எதற்காக இப்படி வற்புறுத்துகிறார்கள் என தெரியவில்லை. கண்ம ருத்துவமனை மட்டுமல்ல பெரிய பெரிய மல்டிஸ்பெஷாலிட்டி ம ருத்துமனைகளிலும் பெரிய பெரிய நிபுணர்களிடம் சென்றாலும் இதே வேலை தான் நடக்கிறது. அரசு மரு த்துமனையில் போதுமான ம ருத்துவவசதி கிடைக்கவில்லை என்று தான் தனியாருக்கு வருகிறோம். 

real-life-experience erode

தனியாரிலும் காசு கொடுத்து கூட நமக்கு கிடைக்க வேண்டியது கிடைப்பதில்லை என்றால் என்ன செய்வது? கைராசி டாக்டர் என்ற பெயர் பெற்றதால்தான், எவ்வளவு காசு செலவானாலும் பெரிய டாக்டரை பார்த்துவிடலாம் என வருகிறார்கள். அங்கு வந்து பெரிய டாக்டருக்கான காஸ்லியான ஃபீஸை வசூலித்துக்கொண்டு ஜூனியர் டாக்டரை பார்க்க வற்புறுத்தினால் என்ன செய்வது? இதற்கு தனியாக கிளினிக் வைத்துள்ள, குறைவாக வசூலிக்கும் ஜூனியர் டாக்டரையே பார்த்துவிட்டு போகலாமே?