Out of Box

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை செய்வதெல்லாம் பி ராடுத்தனமா? இந்த உண்மை தெரிந்தால், இத்தனை களோபரங்களுக்கு வேலையே இல்லை!

Sep 09 2020 06:54:50 PM

முதலில் நானும் ராமர்பிள்ளையை நம்பியவன் தான். தமிழர் ஒருவர் மாற்று எரிபொருள் கண்டுபிடித்ததாக எண்ணி ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தேன். போகப்போக அவருடைய நடவடிக்கைகளை கவனித்த பிறகும், அவரை நம்பி ஏமாந்தவர்களின் கதையை கேட்ட பிறகும், இப்போது 1% கூட அவர் மீது நம்பிக்கை கிடையாது. ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் சர்ச்சை இன்னைக்கு, நேற்று தொடங்கியது என்று நினைத்துவிட வேண்டாம். 25 வருடங்களாக முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.

ramar-pillai organic-petrol petrol

மேடையில் மேஜிக் நடத்தும் கலைஞர், மக்கள் கண் திறந்திருக்கும் போதே லாவகமாக சில தந்திரங்களை கையாண்டு, மாயாஜாலம் செய்வார் அல்லவா? அது மாதிரியான டிரிக்கை வைத்து 25 வருடங்களாக அரசுக்கும் மக்களுக்கும் கண்கட்டி வித்தை காட்டிவருகிறார் என்றால், எவ்வளவு பெரிய கில்லாடி என்று பார்த்துக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 25 வருடங்களுக்கு முன்னர், ராமர் பிள்ளை தயாரித்த மூலிகை பெட்ரோலை, வண்டிக்கு பயன்படுத்தி பார்த்துள்ளார்.

ramar-pillai organic-petrol petrol

இஞ்சின் பாகங்கள் மொத்தமாக பழுதடைந்துள்ளது. அந்த நேரத்தில் மூலிகை பெட்ரோலுக்கு ஏஜென்சி கொடுக்கிறேன் என்று சொல்லி, பலரிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய கதையும் உண்டு. தமிழ், தமிழர் என்று சொல்லி, ஒரு பொய்யை மிகைப்படுத்திக்கூறினால், அதனை நம்பிவிடும் பழக்கம் நம் மக்களிடையே இன்றளவும் உண்டு. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும், ராமர் பிள்ளை போன்ற ஆட்கள், குறுகிய காலத்தில் நிரம்ப சம்பாரித்துவிட்டு, சத்தமின்றி ஒதுங்கிவிடுகின்றனர். அந்த சூட்சமம் தெரியாமல், அவர்களுக்காக அப்பாவித்தனமாக கம்பு சுத்திக்கொண்டிருக்கிறோம்.

ramar-pillai organic-petrol petrol

எந்த புதிய கண்டுபிடிப்பாக இருந்தாலும், பல கட்ட சோதனைகளுக்கு பிறகே மக்கள் கைகளுக்கு வரும். அது தெரியாமல், தமிழனின் முயற்சியை தடுக்காதே என்று சோஷியல் மீடியா டிரெண்டிங் வேறு. பல வருடங்களுக்கு முன்பே, மத்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில், ராமர் பிள்ளையின் பெட்ரோல் மாதிரியை சோதித்து காட்டியபோது, இடையில் பிராடுத்தனம் செய்கிறார் என்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதே போல பல இடங்களில் நிரூபித்துக்காட்டுகிறேன் என்று சொல்லி, குட்டு உடைந்து முக்கறுந்து மட்டுமே வெளியேறியிருக்கிறார்.

ramar-pillai organic-petrol petrol

தண்ணீரை பெட்ரோலாக மாற்றி காட்டுகிறேன் என்று சொல்லி நிரூபிக்க வரும் போது, கையில் சிறிய பாட்டில் ஒன்றை எடுத்துவருவாராம். எப்படியாவது தந்திரம் செய்து, கொடுக்கப்படும் நீருக்குள், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அந்த நீர்மத்தை ஊற்றிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அது என்ன என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தால், வேதி பொருளான "பென்சீன்" என்பது தெரிய வந்துள்ளது. வாயிக்கு வந்த படி, மூலிகை பெட்ரோல் குறித்து, ராமர் பிள்ளை அடித்து விடும் தகவல்கள் எல்லாம், எதிர்கால தொழில்நுட்பம் மூலம் கூட சாத்தியம் இல்லை.

ramar-pillai organic-petrol petrol

அப்படி இருந்தும், அவர் கையில் வைத்திருக்கும் ஒரு குச்சி, சில நொடியில் வேதியியல் மாற்றம் ஏற்ப்படுத்தும் என்பதை, எந்த அறிவியலாலும் நிரூபிக்க முடியவில்லை. முன்னரே இவரின் பிராடுத்தனம் தெரிந்து பல முறை கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கேரளாவில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். 20 ரூபாயில் பெட்ரோல் கிடைக்கும் என்றெல்லாம் அடித்து விடுகிறார். அவர் தான், முடியும் என்றாரே, விட்டு தான் பாருங்களேன் என்று சொல்லலாம்.

ramar-pillai organic-petrol petrol

முறைப்படி ஒரு வாகன எரிபொருள் இஞ்சினில் செலுத்தப்பட்டு, 500 மணி நேரம் அதன் திறனை சோதிக்க வேண்டும். அதிலிருந்து வெளியேறும் மாசு, இஞ்சினில் ஏற்படுத்தும் தாக்கம், அதனுடைய திறன் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மண்ணெண்ணெய் ஊற்றினாலும் கூடத்தான், பெட்ரோல் இஞ்சின் ஓடும். அதற்காக அதனை ஊற்றி வண்டியை இயக்குவோமா? அது போலத்தான், இந்த மூலிகை பெட்ரோலும், தீ பற்றி போட்டால் எரிகிறது என்பதற்காக மட்டுமே, அதனை பெட்ரோல் என்று கூறி வாகனத்தில் ஊற்றிவிட முடியாது. சானிடைசர் கூடத்தான் எரியும். ஆனால் அது பெட்ரோலாகி விடாது. இன்னும் பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டும். மேற்கண்ட தகவலில் நம்பிக்கை இல்லை என்றால், 2018 ஆம் ஆண்டு, ராமர் பிள்ளை நேரில் அழைக்கப்பட்டு, அவர் செய்த பித்தலாட்டங்களை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் LIMS யூடியூப் குழுவினர். இதனையும் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.