Out of Box

கப்புசுப்புன்னு கல்யாணம் செய்து, கமுக்கமா மு தலிரவு நடத்தி விட்டு போக வேண்டியதுதானே? எதற்கு இப்படி ஊர்வாயில் விழுகிறார்கள்? இப்படி ஒரு விஷயத்தை செய்ய தூண்டிய பின்னணி!

May 24 2021 11:37:00 PM

மணமக்கள் ராகேஷ் மற்றும் தீக்ஷனா திருமணம் பற்றி ஊரே பேசிக்கொண்டிருக்கிறது. இதனை தான் ஊரே மெச்சும் அளவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்கிறார்களோ? மதுரையை சேர்ந்த மணமக்கள் ராகேஷ் மற்றும் தீக்ஷனா குறித்த நாளில் திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டுமென முடிவு செய்து ஒரு யுக்தியை கையாண்டுள்ளனர். வித்தியாசமாக திருமணம் செய்தால் வீட்டிற்கு இன்டர்வியூ எடுக்க வருவார்கள், பெரிய பெரிய செய்தி சேனல்களில் செய்தியாக போடுவார்கள் என்ற நப்பாசையில் இந்த ஜோடிகள் ஒரு புதுமையை திருமணத்தில் கையாண்டு உள்ளார்கள் போல தெரிகிறது. ஆனால் நிதர்சனம் என்னமோ, வீட்டிற்கு வி சாரணை கமிஷன் தான் வரப்போகிறது. என்னவோ சொந்தக்காசில் சூ னியம் வைத்துக்கொண்டார்கள். 

wedding flight-wedding madurai

காசு படைத்தவர்கள் என்னிடம் காசு உள்ளது என காட்டும் களம் தான் திருமண மேடையும் திருமண நிகழ்வுகளுக்குண்டான செலவுகளும். அப்படித்தான் இந்த தம்பதிகளும் ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து, அதில் தன்னுடைய உறவினர்கள் 100 பேருக்கு டிக்கெட் புக் செய்து, சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானத்தில் தாலி கட்டியுள்ளார் மாப்பிள்ளை. பெரிய ஜமீன் பரம்பரையாக இருப்பார் போல ஆகாயத்தில் பறந்து பறந்து தாலி கட்டியிருக்கிறார். 

wedding flight-wedding madurai

இப்படி விதிகளை மீறி 100 பேருக்கு அதிகமாக மக்களை கூட்டி திருமணம் செய்தது தவறு என்றவகையில் விசாரிக்குமாறு விமான போக்குவரத்து இயக்கம் ஆணை பிறப்பித்துள்ளது. இதுதான் ஆப்பை தேடி போய் உட்கார்வது. மக்கள் செ த்து கொண்டு இருக்கும் நிலையில், அரசு முடிந்தவரை மூச்சை பிடித்துக்கொண்டு செயல்படுகிறது. முக்கியமாக பெண் ம ருத்துவர்களும் செவி லியர்களும் பெற்ற குழந்தையை பார்த்தே வருடமாகிறது என்கிறார்கள்  இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆடம்பர திருமணம் அவசியமா? வித்தியாசமாக திருமணம் செய்ய முயல்வோர், அடுத்து கொ ரோனா வார்டில் நின்று கொண்டு தாலிகட்ட முயற்சிக்கலாம். புதுமையாக யோசிக்கிறேன் என ஆறாம் அறிவை இழந்து கொண்டு இருக்கிறோம். சாதாரண மக்களுக்கு இ.பாஸ் கிடைக்கவே முட்டி மோத வேண்டியிருக்கு. இங்கு விமான திருமணம். 

wedding flight-wedding madurai

அரசு உத்தரவை மீறியும் எப்படி இப்படி செய்திருப்பார்கள்? கண்டிப்பாக பணபலம், அரசியல்பலம் இவற்றையெல்லாம் தாண்டி நமது அரசும் சட்டமும் என்ன செய்துவிட போகிறது என்று தானே இருந்திருப்பார்கள்? என்ன அதிகபட்சமாக ஒரு பத்து வருட க டுங்காவல் த ண்டனையா கொடுத்துவிட போகிறார்கள்? அப்படி கொடுத்தாலும் கொடுக்கும் த ண்டனையை தகர்க்கும் அளவிற்கு பணம்படைத்தவர்களாக இருப்பார்கள். 

wedding flight-wedding madurai

இவர்கள் எல்லாம் எட்டுமாத குழந்தைக்கு தாயான பெண் டாக்டர் இ றந்து போன செய்தியை எளிதாக கடந்த சென்றவர்களாக தான் இருப்பார்கள். அவனவன் வீட்டில் சா வு விழும் வரை மற்றவர்களது உ யிர் துட்சம் தானே? பெருந்தொ ற்று காலத்தில் பொறுப்பற்ற செயல், ஒருநாள் தினத்தை கடக்க அல்லல்படும் சாமானியர்களின் து ன்பத்தில் பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆடம்பரத்தை இச்சூழலில் குறைத்துக்கொள்ளவேண்டும் என்கிற சிந்தனைக்கூட இல்லாதவர்கள். மனித அ வலத்தின் வெளிப்பாடு. 

wedding flight-wedding madurai

இந்த செய்தியை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், 'திருமணத்திற்கு சென்ற அனைவரும் கொ ரானா வார்டில் பணி செய்ய உத்தரவிட வேண்டும். சத்தமில்லாமல் கல்யாணம் செய்து அமைதியாக மு தலிரவு நடத்தி விட்டு போக வேண்டியதுதானே? இவர்களுக்கு எல்லாம் கடும் த ண்டனையாக இருவரையும் ஆறு மாதம் விலக்கி வைக்க வேண்டும். கல்யாண கோஷ்டி மற்றும் விமான நிறுவனம் இரண்டும் தலா ஒரு கோடியை கொ ரானா நிவாரண நிதிக்கு கொடுக்க சொல்ல வேண்டும்' என புலம்பி வருகிறார்கள்.

wedding flight-wedding madurai

முடி உள்ளவன் அள்ளி முடிகிறான் இல்லாதவன் கம்முனு தானே இருக்கணும்? இவர்களை மட்டும் இந்த விஷயத்தில் கு ற்றம் சொல்ல கூடாது. இத்தனை பேர் ஓரே நேரத்தில் ஓரே ஊருக்கு டிக்கெட் பதிவு செய்யும்பொழுது விமானபோக்குவரத்துறை விசாரிக்காமல் உள்ளதை என்னவென்று சொல்வது?