Spellbound

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த காலத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகர் தெரியுமா?

Jul 21 2021 10:29:00 AM

1980 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வளம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தான் பிளாக் அண்ட் ஒயிட், கலர், 3D அனிமேஷன் என அனைத்து தொழில்நுட்பங்களிலும் நடித்த ஒரே தமிழ் நடிகர். சூப்பர் ஸ்டார் தற்போது 90 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். இவர் வாங்கும் சம்பள பணம் மட்டுமல்லாமல் படம் வெற்றி பெற்றால் ஒரு குறிப்பிட்ட பங்குத் தொகையும் ரஜினிகாந்துக்கு கொடுப்பதாக திரைத்துறையில் பேசிக்கொள்கிறார்கள். அதன் காரணமாகத்தான் படம் தோ*ல்வி அடைந்தால் கூட ரஜினிகாந்த் படத்திற்கு ந*ஷ்டஈ*டு கொடுக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

rajinikanth high salary rajkiran

தற்போது ரஜினிகாந்த் 90 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். நடிகர் விஜய் நடிக்கும் பிஸ்ட் படத்திற்காக 100 கோடி சம்பளம் பெறுவதாக திரைத்துறையில் பேசிக்கொள்கிறார்கள். நடிகர் ரஜினியின் வயது தற்போது 70. விஜய் ரஜினியின் சம்பளத்தை முந்தியது விஷயம் இல்லை. காரணம் இந்த வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் 90 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது ஒரு பெரிய சாதனை தான்.

rajinikanth high salary rajkiran

ஆனால் ரஜினிகாந்த் உச்ச நடிகராக இருந்தபோதே அவருடைய சம்பளத்தை விட ஒரு நடிகர் அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார். அவர் வேற யாரும் இல்லீங்க, நம்ம ராஜ்கிரண் தான். இவர் தான் முதன்முதலில் வடிவேலுவை திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர். தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தன் கலைப் பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் படிப்படியாக தயாரிப்பாளர் மற்றும் நடிகராக முன்னேறினார்.

rajinikanth high salary rajkiran

என் ராசாவின் மனசிலே படத்தில் நடிகராக அறிமுகமாகி அந்த படம் 100 நாட்களை கடந்து ஓடியது. பின்னர் இவர் தொட்டதெல்லாம் வெற்றி என்பதைப் போல எல்லாமே என் ராசாதான், அரண்மனைக்கிளி போன்ற படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. 1998 ஆம் ஆண்டு பொண்ணு விளையுற பூமி படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். அப்போது உச்சத்தில் இருந்த ரஜினிகாந்தின் சம்பளம் ஒரு கோடி ரூபாய் தான்.

rajinikanth high salary rajkiran

ஆனால் பொண்ணு விளையுற பூமி படம் வெளியாகும் முன்னர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தோ*ல்வி அடைந்தன. இதனால் பொண்ணு விளையுற பூமி படம் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் அவருக்கு எல்லாமே இறங்குமுகமாக அமைந்தது. இருந்தாலும் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக இருந்தபோதே அவரைவிட சம்பளம் வாங்கிய ராஜ்கிரண் பெரிய ஆள்தான்.

rajinikanth high salary rajkiran