Out of Box

எல்லா மதங்களும் இனி ஒரே நேர்கோட்டில்! ரஜினியின் ஆன்மிக அரசியலின் இரகசியம் உடைந்தது! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

Sep 13 2020 11:26:00 PM

ரஜினி ஆன்மீக அரசியல் என்கிறாரே, அப்படியென்றால் அவர் குறிப்பிட்ட சமயத்தை வலியுறுத்துகிறாரா? ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் கட்சியில் சேரக்கூடாதா? என இப்படி பல கேள்விகள் மனதில் எழலாம். ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கான விளக்கமே, எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியோ, மதமோ சார்பற்றது. அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் ஆன்மீக அரசியலுக்கான விளக்கம். பொதுவாக ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைய வேண்டும் என்றால் கூட, ஏதாவது ஜாதி அல்லது மத சங்கத்தை சேர்ந்தவராக இருக்க கூடாது என்பது அடிப்படை விதி. 

rajini political-entry

'ஆன்மீக அரசியலா? அப்படியென்றால் இந்துத்துவ அரசியல் அவ்வளவு தானே?' என்று சிலருக்கு தோன்றியிருக்கலாம். ஆன்மீகம் என்றாலே காவி மட்டும் தானா? மற்ற மதங்களில் உள்ள குருமார்கள் ஆன்மீக வாதிகள் இல்லையா? உதாரணத்திற்கு போப்பாண்டவர் ஆன்மீகவாதி இல்லையா? 

rajini political-entry

இங்கு ஒரு பக்கம் கடவுளே இல்லை என்பதை வைத்து அரசியல் செய்கிறார்கள், ரஜினி கடவுளை வைத்து அரசியல் செய்ய போகிறார் அவ்வளவுதானே என்று சலிப்படைந்து விவாதம் செய்பவர்களையும் பார்க்க முடிகிறது. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பின்னர் உள்ளது என்னவென்றால், எல்லா மதத்தை சேர்ந்தவர்களின் ஒற்றுமை மட்டுமே வேண்டும் என்பதாகும். ஆனால் இந்த புரிதல் மற்ற மதத்தினர் மத்தியில் உள்ளதா என்பது சந்தேகம் தான். மற்ற மதத்தினர் மத்தியிலும் இந்த புரிதல் விரைவில் ஏற்பட, ரஜினிக்கு மக்களுடன் ஒரு சில கலந்துரையாடலே போதுமானது. ஏனெனில் இங்கு ஆன்மீகம் என்றாலே இந்து மதம் மட்டும் தான் என மக்கள் மத்தியில் ஒரு தவறான புரிதல் நிலவுகிறது.

rajini political-entry

ஆன்மீக அரசியல் என்ற உடனே ரஜினியை பா.ஜ.வுடன் இணைத்து பேச ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம்.
ஆன்மீக அரசியல் என்றால் ஜா தி மதம் இனம் ஒன்று சேர்ந்து எந்த பேதமும் இன்றி உருவாக வேண்டும் என்பது மட்டுமே. மேலும் யாருடைய நம்பிக்கையும் உடைக்க வேண்டாம் என்பதும் கூட, சமீபத்தில் கூட கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியதற்கு, ரஜினி யாருடன் நம்பிக்கையையும் இழிவுபடுத்த வேண்டாம் என்ற விதத்தில் ட்விட் செய்திருப்பார். 

rajini political-entry

ரஜினியின் ஆன்மீக அரசியலை சாடும் திராவிட கட்சிகள், தேர்தல் என வரும்போது மட்டும் நாங்க இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை என சொல்வது ஏனோ? மத சார்பின்மை சொல்லிக்கொண்டு, கட்சிகள் சிறுபான்மையினருக்கு அரணாக நிற்கிறேன் என்கிறார்களே? கட்சியில் உயர் பதவியில் எத்தனை சிறுபான்மையினருக்கு இடம் கொடுத்துள்ளார்கள். வெறும் மேடை பேச்சில் மட்டும் தான் மதச்சார்பின்மை. பல கட்சிகள் நாங்க சிறுபான்மையினர்களின் காவலர் என கூறிக்கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். மதத்தை உணர்ச்சி பூர்வமாக பயன்படுத்தி கொண்டு மக்களை பிரித்து வைக்கும் வேலையை தான் பல கட்சிகள் மறைமுகமாக செய்கின்றன. 

rajini political-entry

இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் சரி, போலி மதசார்பின்மை வைத்து, கட்சிகள் மக்களிடம் பிரிவினை செய்வதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நேரடியாக மத சார்புடையவர்களாக இருந்துவிடலாம். போலியாக வேடம் போடுவதை காட்டிலும் உண்மையான மதசார்புடையவராக, எல்லா சமூகத்தினரையும் ஒரு குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை தான் ஆன்மீக அரசியல் வாயிலாக ரஜினி வலியுறுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.