Out of Box

ரஜினி வந்தால் மொத்த கூட்டத்திற்கும் ஆப்பு? குலைநடுங்கி போயிருக்கும் பிரபல கட்சிகள்! விஜயை வைத்து காய் நகர்த்தும் மாபெரும் இரகசிய திட்டம்!

Nov 07 2020 11:23:00 PM

பதவியில் இருப்பதால் ஒரு கட்சியும், அவர்களின் பலவீனத்தை நம்பி ஆட்சியை பிடித்து விடலாம் என்ற கனவில் இன்னொரு கட்சியும் இருப்பதாலேயே, இரண்டு கட்சிகளும் வீழ்த்த முடியாத கட்சிகள் போல தோன்றுகிறது. ரஜினி போன்ற புகழ்மிக்க ஒருவர் அரசியலில் நுழைந்தால்தான் இரண்டு கட்சிகளின் உண்மை நிலை என்னவென்று தெரியும். 96களில் அசுர பலத்தோடு ஆண்டவர்கள் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர் அவர். இந்த உருட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆளா?

rajini vijay party

சினிமாவுக்கும், அரசியலுக்கும் பிரிக்க முடியாத மார்க்கெட் இருக்கு. தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அரசியலை பிரிக்கவே முடியாது. கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் எல்லோருமே சினிமாவின் வழி அரசியலுக்கு வந்தவர்கள். பொதுவாக சினிமாவில் சாதித்தால், அரசியலில் சாதிக்க முடியாது என்ற நம்பிக்கை தமிழக அரசியலில் நிலவுகிறது. இருந்தாலும் கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சினிமாவை தாண்டி அரசியலுக்கு பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்ததால் நிலைத்து நிற்க முடிந்தது.

rajini vijay party

அவர்களுக்கு பிறகு வந்த நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் எல்லாமே லெட்டர் பேட் கட்சிகளாக மட்டுமே காலத்தை ஓட்டி வருகின்றன. இதில் விஜயகாந்த் மட்டும் விதி விலக்கானவர். தற்போது கொரோனா தற்காப்பு அவசியத்தை சொல்லி, தற்காலிகமாக மட்டுமே அரசியல் பிரவேச முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கிறார் ரஜினி. கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று சொன்ன ரஜினியின் இறுதி நேர தயக்கத்தால், அது இன்னும் பெரிய வெற்றிடமாக மாறிவிட்டது.

rajini vijay party

அடுத்த உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டாயம் ரஜினி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஆளும் கட்சிக்கு எதிராக திரும்பும் வாக்குகளை திமுக கணிசமாக அறுவடை செய்ய பெரிய அளவில் திட்டம் போட்டு காத்திருக்கிறது. அதனை திமுக பக்கம் செல்ல விடாமல், மடைமாற்றுவதற்கான முயற்சிகளை ஆளும் கட்சி தரப்பு தொடங்கும். இந்த நேரத்தில் ரஜினி களமிறங்குவது, ஆளும் கட்சி வாக்குகளைக்கூட சிதறடிக்கும் என்பதால், ஒரு சில அரசியல் காரணங்களுக்காகவும்  ரஜினியின் அரசியல் பிரவேசம் தள்ளிப்போயிருக்கிறது.

rajini vijay party

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயன்ற எதிர் தரப்பு, நடிகர் விஜயை வைத்து காய் நகர்த்த முயற்சிப்பது அம்பலமாகியுள்ளது. சீக்ரெட்டா முன்னெடுக்கப்பட்டு வந்த திட்டம், விஜயின் தந்தை சந்திரசேகரின் அவசரத்தால் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பா கட்சி அறிவிப்பு விடுகிறார். மகன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். உடனே அம்மா கட்சியில் இருந்து விலகுகிறார். இதெல்லாமே எதேற்சையாக நடப்பது கிடையாது. திரை மறைவில், பல திட்டங்கள் அரங்கேற்றப்பட இருப்பதின் முன்னோட்டமே இவையெல்லாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.