ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைத்தால், தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு தலைகீழ் மாற்றத்தை சந்திக்கும் என்பதை உணர்ந்த கட்சிகள், வேண்டுமென்றே பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து பின்வாங்க வைத்துள்ளன. மக்கள் நீதி மையம், நாம் தமிழர் போன்ற கட்சிகளைப் போல, வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு என்றைக்கும் கிடையாது. காலடி எடுத்து வைத்தால், அது முறையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதற்காக சகாயம் ஐ.ஏ.எஸ் போன்ற நேர்மையான அதிகாரிகளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அணுகி முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கிற்கு, அவர் நினைத்தால், தானே முதல்வர் வேட்பாளராக நிற்க முடியும். ஒரு போதும் அவர் பதவி ஆசையை முன்னிலைப்படுத்தி அரசியலுக்கு வர திட்டமிடவில்லை. தன்னை வாழ வைத்த தமிழ் மண்ணுக்கு தன்னால் இயன்ற மாற்றத்தை கொடுக்க வேண்டுமென மனதார நினைத்தார்.
1996 ஆம் ஆண்டு வாக்கிலேயே, பெரிய பெரிய பதவிகள் ரஜினியை தேடி வந்தது. அப்போதே, நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். பதவி ஆசை இருந்திருந்தால், இந்நேரம் மத்திய அமைச்சர் பதவியை கூட அலங்கரித்திருக்க முடியும். ஆனால் ரஜினி என்றைக்கும் அப்படி சுயநலமாக நினைக்கவில்லை. தன்னை சார்ந்தவர்களுக்கும், தன்னை நேசிக்கும் மக்களுக்கும் உண்மையாகவே ஏதாவது செய்ய வேண்டுமென திட்டமிட்டு அரசியல் நகர்வை முன்னெடுத்துவந்தார்.
தமிழகத்தில், ஒவ்வொரு தேர்தலிலும் பெயரளவில் மட்டுமே மும்முனை போட்டி நிலவும், சொல்லப்போனால், இரு கட்சி ஆட்சி முறை தான். இந்நேரம் ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைத்திருந்தால், தமிழக அரசியல் களம் வேறு விதமாக சென்றிருக்கும் என்பதை தற்போதைய கருத்துக்கணிப்பு புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. ஏன் ஒரு மூன்றாவது அணி வர வேண்டும்? குறிப்பாக ரஜினி வர வேண்டும் என்று சொன்னோம் என்றால் இதனால் தான். இது தந்தி டிவி போட்ட கருத்துக்கணிப்பு. அதாவது பாப்பிரெட்டிபட்டி,கோவை, கோவில்பட்டி என்ற மூன்று தொகுதிகள் பற்றிய தகவல் இதில் இடம்பெறுகிறது.
இதில் பழனியப்பன்,கமல்,டிடிவி என்ற மூன்றாவது பலம் வாய்ந்த சக்தி உள்ளே நுழையும் போது எப்படிப்பட்ட மும்முனை உருவாகிறது பாருங்கள். அதைத்தாண்டி அதிமுக, பாஜக முதலிடத்தை பெறுகிறது. அது இயலாத தொகுதியில் இரண்டாம் இடத்தை பெறுகிறது. ஆனால் திமுக கூட்டணி மூன்றாவது இடத்திற்கு போகிறது. இதனால்தான் மூன்றாவது பலமான சக்தியை இங்கே நுழையவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். அது அரசியல் களத்தையே புரட்டிவிடும்.
இதனை முன்கூட்டியே கணித்து தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே ரஜினிக்கு அழுத்தம் தர ஆரம்பித்தனர். மக்கள் மன்ற நிர்வாகிகளை விலைக்கு வாங்குவது, ரஜினியின் திட்டங்களை வெளியில் கசிய விடுவது போன்ற உள்ளடி வேலைகள் அரங்கேற ஆரம்பித்தன. சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளை முதல்வர் வேட்பாளராக களமிறக்கி, வேற லெவல் அரசியலுக்கு விதை போட்ட ரஜினியை, கடைசி கட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து பின்வாங்க வைத்துவிட்டனர் என்பதே உண்மை.