Out of Box

ரஜினி போட்ட உத்தரவு. படையெடுக்கும் இளைஞர்கள் கூட்டம். தமிழக அரசியலை புரட்டிப்போடும் திட்டம்

Sep 06 2020 01:54:00 PM

புரட்சிகரமான இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதால், அரசியல் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே இல்லாமல் போயிற்று. ஓட்டு போடும் வயது வந்ததும் எந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை வீட்டில் உள்ள மூத்தவர்கள் தான் சொல்வார்கள். நாங்களும் அப்படியே அவர்கள் சொல்வதையே பின்பற்றுவோம். அரசியல்வாதிகள் என்றாலே, ஐம்பது வயதை கடந்தவர்கள் தான் உள்ளார்கள். இளைய அரசியல்வாதிகள் மற்றும் மாற்றத்தை கொண்டுவர துடிக்கும் அரசியல்வாதிகள் ஒருவர் கூட தேடியவரை கண்களுக்கு புலப்படவில்லை.

tamilnadu-politics rajini

எந்த அரசியல் கட்சியை எடுத்தாலும் வாழையடி வாழை என்றபடி, தாத்தா, அப்பா, மகன் என்ற மறைமுக அரசர் ஆட்சி தான் நடக்கிறது. புரட்சியான கொள்கைகளுடன் இளைஞர்கள் வந்தாலும் கத்து குட்டியென மக்களே அவர்களை ஒதுக்கி விடுகிறார்கள். யார் தான் மாற்றம் கொண்டுவருவார்கள்? என்ற ஆர்வத்திலும், இந்த முறை என்னுடைய வாக்கை வீணடித்து விட க்கூடாது என்ற முனைப்பிலும் சில தேடுதலை தொடர்ந்தேன். எந்த அரசு அலுவலகம் எடுத்துக்கொண்டாலும் ஏதாவது ஒரு கரை வேட்டியின் ஆதிக்கம் இருந்துகொண்டு தான் உள்ளது. சாதாரண குடிமகனாக ஒரு சான்றிதழ் விண்ணப்பித்து கிடைப்பதற்கும் ஏதாவது ஒரு கட்சியின் அடிப்படை பிரதிநிதி மூலம் விண்ணப்பிப்பதற்கும் பல வித்தியாசம் உண்டு.

tamilnadu-politics rajini

அரசு கான்ட்ராக்ட் போன்றவைகளில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே கட்சிகள் இடைத்தரகர் போலவே செயல்படுவதை உணர முடிந்தது. எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு கட்சியில் ஏதாவது ஒரு பதவியை சொல்லிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். அரசை உற்று நோக்க ஆரம்பித்த போது கிடைத்த அனுபவத்தை தான் பகிர்ந்துள்ளேன்.

tamilnadu-politics rajini

சக இளைஞராக மாற்றம் தேடி கொண்டிருக்க ரஜினி தீவிரமாக அரசியலில் இறங்க உள்ளதாக ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. பல வருடமாக இதையே தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என நினைத்து கொண்டு அந்த செய்தியை பார்த்துவிட்டு நகர தொடங்கினேன். 

tamilnadu-politics rajini

அப்போது திடீரென கடந்த மார்ச் அன்று ரஜினி லீலா அரங்கில் நடத்திய கூட்டம், என்னை போன்று அரசியலை உற்று நோக்கி காத்திருக்கும் கூட்டத்திற்கு, என்னமோ சொல்ல போகிறார் என்பது மட்டும் புரிந்தது. அதே ஆர்வத்தோடு அவர் பேசியதை கேட்டேன். மனதில் அரசு கட்டமைப்பு குறித்த சலசலப்பிற்கு பதில் சொல்லும் விதமாக இருந்தது அவரது பேச்சு. 

tamilnadu-politics rajini

முதலில் கட்சியில் இருக்கும் தேவையற்ற பதவிகளையும் அதில் உள்ள துணை பதவிகளையும் நீக்க வேண்டும். இந்த பதவிகளை வைத்து மக்களுக்கு நல்லது செய்பவர்களை காட்டிலும் பதவியை வைத்து பிசினஸ் செய்பவர்களே அதிகம் என அவர் கூறியது மாற்றம் காண வேண்டி நிற்கும் சக இளைஞர்களின் குரலாக இருந்தது. 

tamilnadu-politics rajini

இவர் மட்டும் ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்க வேண்டும்? சம்பாதித்தாயிற்று, அடுத்து பதவி ஆசையோ? என மனம் கேள்வி எழுப்பியது. அதற்கும் பதில் கிடைக்கும் விதமாக அவரது அடுத்த பாய்ன்ட் இருந்தது.  'சாதிக்க துடிக்கும், புரட்சி செய்ய விளையும் இளைஞர்களுக்கே இங்கு இடம், மற்றபடி தான் ஒரு வழிகாட்டி அவ்வளவு தான்' என்றதும் இவர் மீது நம்பிக்கை வர துவங்கியது.

tamilnadu-politics rajini

இருப்பினும் அவரது நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள முற்பட்டேன். தேர்தல் நடைபெறும்  போது, 100% வாக்களிப்பு என்பதை சாத்தியபடுத்த வேண்டும். ஆனால் வாக்களிப்பு சதவீதம் குறைந்து கொண்டுதான் வருகிறது. எதனால் இந்த நிலை? இளைய சமுதாயத்திற்கு இந்த சிஸ்டம் மேல் நம்பிக்கை இல்லை, ஆர்வம் இல்லை என்பதெல்லாம் சேர்ந்து அவர்களை சரியான கட்சிக்கு ஓட்டு போடும் ஆர்வத்தை குறைத்து நாளடைவில் ஓட்டு போடும் எண்ணமே இல்லாமல் செய்து விடுகிறது.

tamilnadu-politics rajini

இதற்கு என்ன தீர்வு? அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பு இருந்தால் தான் அரசியலில் பெரும் பங்களிப்பு நமக்கும் உண்டு என்பதை உணர்ந்து இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்றப்பார்கள், கேள்வி கேட்பார்கள், அரசியலை ஆராய்வார்கள். இருக்கும் கட்சியில் எல்லாமே முதிர்ச்சி பெற்றவர்களே இருக்கும் போது, நமக்கும் இதற்கும் தொடர்பு இல்லை அல்லது அந்த வயது எட்டினாலே அரசியல் பற்றி தெரிந்துகொள்ள முடியும் என அசால்ட்டாக இருந்து விடுகின்றனர்.

tamilnadu-politics rajini

ரஜினி சொல்வது போல அவரது கட்சியில் இளைஞர்கள் பங்களிப்பு இருக்கும் போது கண்டிப்பாக எதிர்கால சந்ததியினருக்கு அரசியல் குறித்த தெளிவான அறிவு இருக்கும். அவர் சொன்னது போலவே, கட்சியில் தேவைற்ற பதவிகள் இருக்காது. தேவையற்ற பதவிகளை வைத்து கொண்டு அதன்மூலம் அரசின் ஆதாயம் பெறுபவர்கள் காணாமல் போவார்கள். திறமை மட்டுமே பேசும். இதெல்லாம் நடக்கும் போது, மக்கள் நல திட்டங்களை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளே இருக்காது. இவற்றையெல்லாம் ஆராயும் போது, புது சகாப்தம் உருவாக ரஜினி விதையிட்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.