Out of Box

நீ கிங் மேக்கர் தலைவா! வேலைக்கு போன 500 பேர் கோடீஸ்வரர்கள் : ரஜினியின் பாணியால் உலக அளவில் ராஜாவான தமிழர்! 25 ஆயிரம் கோடினா சும்மாவா?

Sep 25 2021 12:26:00 PM

பெரிய நிலையை அடைந்த எல்லோருக்குமே ஒரு தூண்டுகோலா யாராச்சும் இருப்பாங்க. எனக்கு எங்கப்பா முன்னுதாரணமா இருக்காரு. 10 வயதில் அம்மா, அப்பாவை இழந்து, போட்டுக்க துணி, மணி கூட இல்லாம தெருவில் சுற்றி இருக்காங்க. நேர்மையா உழைத்து, இன்னைக்கு அவர் தகுதிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து சேர்த்து வெச்சிருக்காங்க. எனக்கு எங்கப்பா மாதிரி, இப்போ வளர்ந்து வரும் பிரபலங்களுக்கு ரஜினி முன்னுதாரணமாக இருப்பதை பார்த்தால், அவருடைய ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

rajini freshworks nasdaq

உங்களுக்கு ரஜினியை பிடிக்கட்டும், பிடிக்காமல் கூட போகட்டும். அவருடைய இரசிகர்களுக்கு, ரஜினி மானசீககுரு. தயவு செய்து தப்பா பேசி புண்படுத்த வேண்டாம். எல்லா இடங்களிலும், ஏதாவது ஒரு நெகட்டிவ் இருக்கத்தான் செய்யும். அதை சொல்லி சொல்லி காண்பித்து, ஒருவரை இறக்கிப்பேசுவதை விட, அவர் செய்த நல்ல செயல்களையும், அதனால் உண்டாகும் விளைவுகளையும் ஆதரிக்கப் பழகிக்கொண்டால், எத்தனையோ பேருடைய வாழ்க்கை நம்மால் மாறக்கூடும். 

rajini freshworks nasdaq

எனக்கு தெரிந்து மூன்று தலைமுறையினர் ரஜினியின் நடிப்பை பார்த்து வளர்ந்துள்ளனர். அவரிடமிருந்த பாஸிடிவ் தோரணையை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட எத்தனையோ பேர் வாழ்வில் பெரிய நிலைக்கு சென்றுள்ளனர். அந்த வரிசையில் சமீபத்தில் பிரபலமான freshwork நிறுவனத்தின் நிறுவனரும் இடம்பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர், அமெரிக்காவில் தொழில் தொடங்கி, இன்னைக்கு உலகின் மிகப்பெரிய பங்குசந்தையான நாஸ்டாக்கில் அவரது நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

rajini freshworks nasdaq

தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த 500 பேருக்கு கம்பெனி பங்குகளை பிரித்துக்கொடுத்து, அவர்களையும் கோடீஸ்வரராக மாற்றியுள்ளார் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம்.  இதில் 70 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்றால், எவ்வளவு துடிப்பான இளஇரத்தம் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ரஜினி தனது மானசீக குரு என கூறும் கிரிஷ், அமெரிக்க பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தை பட்டியலிட செய்யும் திட்டத்துக்கு  சூப்பர் ஸ்டார் திட்டம் என்றே பெயரிட்டுள்ளார்.

rajini freshworks nasdaq

ரஜினியின் படங்கள் எப்போது ரிலீஸ்சானாலும், சென்னையில் உள்ள திரையரங்குகளை தனது ஊழியர்களுக்காக மொத்தமாக முன்பதிவு செய்துவிடுவார்.  சில ஆண்டுகளுக்கு முன் இவருடைய நிறுவனத்துக்கு பதக்கம் ஒன்று கிடைத்த போது அந்த விழாவில் பேசிய கிரிஷ், தன்னுடைய கனவெல்லாம், தனது நிறுவனத்தை ரஜினியை பார்வையிட செய்வது மட்டுமே என்றுள்ளார். எத்தனையோ இளைஞர்கள் சினிமாவை பார்த்து கெட்டுப்போவதாக கூறிக்கொண்டிருக்கும் நிலையில், ரஜினி என்ற ஒற்றை ஆளுமையால் மட்டுமே இதுபோன்ற இரசிகர்களை சாத்தியப்படுத்த முடிகிறது. freshworks நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 25 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.